சன்ரூஃப் இல்லைனா ஹூண்டாய் காலியாகிடும்போலையே.. 14ல் 12 கார்கள்ல இந்த அம்சத்தை தராங்க!

இந்தியாவில் அறிமுகம் தேவைப்படா ஓர் கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் (Hyundai) உள்ளது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) கார்களுக்கும், சன்ரூஃப் (Sunroof) அம்சம் கொண்ட கார்களுக்கும் மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் 2024-2025 நிதியாண்டின் கார் விற்பனை பற்றிய புள்ளி விபரம் வெளியாகி இருக்கின்றது. இதன் வாயிலாகவே இந்த தகவல் தற்போது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் மொத்தமாக இந்தியாவில் 14 கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த 14இல் 12 கார் மாடல்களில் சன்ரூஃப் ஆப்ஷனை நிறுவனம் வழங்குகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அதிலும், இந்த அம்சம் கொண்ட எஸ்யூவி காருக்கு டிமாண்ட் இரட்டிப்பாகக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 53.2 சதவீத பங்கினை சன்ரூஃப் கார்களே பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Hyundai s sunroof models capture 53 2 percent sales

இதேபோல், மொத்த விற்பனையில் 68.5 விற்பனையை எஸ்யூவி ரக கார்கள் பிடித்து இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் குட்டி எஸ்யூவி காரான எக்ஸ்டர் (Exter), வென்யூ (Venue) மற்றும் கிரெட்டா (Creta) ஆகிய கார் மாடல்களே மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன.

எஸ்யூவி கார் பிரிவில் இந்த கார்களை மட்டுமல்ல அல்கஸார் (Alcazar), டக்சன் (Tucson) மற்றும் ஐயோனிக் 5 (Ioniq 5) ஆகியவற்றையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றை மட்டுமல்ல செடான் (Sedan) கார்கள் பிரிவில் வெர்னா (Verna) மற்றும் அவுரா (Aura) ஆகிய கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் கிராண்ட் ஐ10 நியாஸ் (i10 Nios), ஐ20 (i20) ஆகிய கார் மாடல்களையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல்கள் சிலவற்றில் சிஎன்ஜி, டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இதைத்தொடர்ந்து, அடாஸ் (ADAS) அம்சம் கொண்ட காருக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்திருக்கின்றது. சென்ற 2023-2024 நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த அடாஸ் அம்சம் கொண்ட காரின் விற்பனை, 2024 ஆம் நிதியாண்டில் 14.3 சதவீதம் என்கிற இரட்டிப்பான விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.

மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக இந்தியாவில் ஒவ்வொரு செகண்டுக்கும் ஹூண்டாயின் ஏதேனும் ஒரு சன்ரூஃப் வச்ச கார் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் மொத்தமாக சென்ற நிதியாண்டில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 666 யூனிட்டு வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

இது 2024 நிதியாண்டைக் காட்டிலும் சற்றே குறைவான விற்பனை ஆகும். 2024 நிதியாண்டில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 721 யூனிட்டுகள் வரை ஹூண்டாய் வாகனங்கள் விற்பனையாகின என்பது கவனிக்கத்தகுந்தது. இது இந்தியாவில் மட்டுமே விற்பனையாகிய ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் சன்ரூஃப் வச்ச மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்க மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன. இதுமட்டுமல்ல அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 14:07 [IST]
English summary
Hyundai india s sunroof equipped vehicles reached 53 2 percent of sales in fy25
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+