வெறும் 19 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! முக்கி முக்கி வித்தும் இந்த காரை விக்க முடியல! ஏன் தெரியுமா
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. மாருதிக்கு அடுத்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இந்த ஹூண்டாய் நிறுவனமாக இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் காரில் ஒன்று மிக குறைவான விற்பனையை பெற்றள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த மார்ச் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இந்நிறுவனம் விற்பனை செய்யும் கிரெட்டா கார்கள் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான எஸ்யூவி காராக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 18,059 கார்கள் விற்பனயைாகியுள்ளன. இந்த நிறுவனம் விற்பனை செய்யும் கார் ஒன்று கடந்த மார்ச் மாதம் முழுவதும் வெறும் 19 வாடிக்கையாளர்களையே ஈர்த்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் அயானிக் 5 என்ற எலெக்ட்ரிக் கார் தான் இது. இந்த கார் க சரியாக 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 65 வாடிக்கையாளர்களை ஈர்த்தது. தற்போது அதிலிருந்து விற்பனை குறைந்து வெறும் 19 பேர் மட்டுமே மார்ச் மாதத்தில் இந்த காரை வாங்கியுள்ளனர். இந்த காரில் அம்சங்கள் மற்றும் ஆப்ஷன்கள் சிறப்பாக இருந்த போதிலும் விற்பனை பெரிய அளவில் இல்லை.
இந்த ஹூண்டாய் அயானிக் 5 காரை பொருத்தவரை 72.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 631 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த காரை சார்ஜ் போட்டால் 0-80 சதவீதமான பேட்டரி 21 நிமிடத்தில் சார்ஜ் ஏறி விடுகிறது. இதற்காக 150 கிலோ வாட் ஹவர் சார்ஜரை பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் 50 கிலோ வாட் ஹவர் சார்ஜரை பயன்படுத்தினால் வெறும் 1 மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஏறிவிடும். இந்த கார் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த காரின் உள்ளே 12.3 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிரைவர் டிஸ்பிளேயும் தனியாக இருக்கிறது. இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ46.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை தான் இதன் குறைவான விற்பனைக்க காரணம் என தெரிகிறது. இந்த கார் வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்டு நேரடியாக இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக விற்பனைக்கு வருவதால் இந்த கார் விலை அதிகமாக இருக்கிறது.இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.

இந்த காரின் வரவேற்ப்பு சிறப்பாக இருந்தால் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யும். அப்படி செய்தால் இந்த காரின் விலை வெகுவாக குறையும். பாதிக்கும் அதிகமாக விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் தற்போது இந்த காரின் விற்பனை சரிவை பற்றி ஹூண்டாய் பெரிய அளவில் கவலை கொள்ளாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாக கொண்டே வருகிறது. இதனால் தனக்கென ஒரு மார்கெட்டை பிடிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில் தனது நிறுவனத்தையும் அந்த போட்டியில் வைத்திருக்க தனது பிரிமியம் காரை விற்பனை செய்கிறது. இது நிச்சயம் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை பெறும்.


Click it and Unblock the Notifications









