அதிக மைலேஜ் தருதுன்னு சொன்னதும் காசை பார்க்காம இந்த ரெண்டு கம்பெனி காரையும் வாங்கி குவிச்சிட்டாங்க!

ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து உலகளவில் ஹைபிரிட் கார் விற்பனையில் புதிய சாதனையை படைக்கவுள்ளது. இந்நிறுவனம் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் கியா கார்ப் ஆகிய நிறுவனங்கள் கொரியாவை தலைமையிடமாக ஒரே தலைமையின் கீழ் இயங்கும் இரு நிறுவனங்களாக உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து கார்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இரண்டும் வேறு வேறு பிராண்ட் என்றாலும் இரு நிறுவனங்களும் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றன.

Hyundai and Kia hybrid sales in 2025

உலகம் முழுவதும் மாசு வெளியேற்றத்தில் மிக அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் அதற்கு ஒரு தீர்வாக இருந்தாலும் அதில் நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்பு குறைவு தான். அதனால் மக்கள் மத்தியில் ஹைபிரிட் கார்கள் பிரபலமாகி வருகிறது. இது நீண்ட தூரம் பயணிக்க உதவும், அதே நேரம் அதிக மைலேஜையும் வருவதால் இந்த ரக கார்களை அதிகம் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் கியா கார்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மொத்தம் 831933 ஹைபிரிட் கார்களை விற்பனை செய்துள்ளன. இது கடந்தாண்டு இதே காலகட்ட விற்பவனையை ஒப்பிடும் போது 27.2 சதவீதம் அதிகம் ஆகும். இந்நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 1.1 மில்லியன் அதாவது 11 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai and Kia hybrid sales in 2025

இந்த இரு நிறுவனங்களும் உலகின் முக்கியமான மார்கெட்களில் ஹைபிரிட் கார்களை விற்பவனை செய்வதில் பிரதான கவனத்தை செலுத்தி வருகிறது. மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் உடனடியாக நிகழவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி விலை மற்றும் அதன் மீது விதிக்கப்படும் வரிகள் எல்லாம் இந்த வாகனத்தின் விலையை அதிமாக்குகிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இவிகளுக்கு மவுசு குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் கலந்த தொழிற்நுட்பத்தில் மீது கவனம் திசை திரும்பியுள்ளது.

Hyundai and Kia hybrid sales in 2025

ஹூண்டாய் - கியா தயாரிப்பில் ஏகப்பட்ட ஹைபிரிட் கார்கள் சர்வதேச மார்கெட்டில் விற்பவனையாகி வருகிறது. டுஸான் ஹைபிரிட் கார் 1,32,991 வாகனங்களும், ஸ்போர்ட்டேஜ் ஹைபிரிட் கார் 1,20,054 வாகனங்களும், சாண்டா ஃபே ஹைபிரிட் கார் 95168 கார்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்கெட்டில் அதிக அளவில் விற்பவனையாகியுள்ளது.

கொரியாவிலும் ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பாலிசைட் ஹைபிரிட் கார் 26930 கார்கள் அதற்குள் விற்பனையாகியுள்ளது. அதே நேரம் இதில் ஹைபிரிட் இல்லாத நேரடி பெட்ரோல் கார் வெறும் 18,005 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. பெட்ரோல் காரை விட ஹைபிரிட் கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைபிரிட் கார்களின் விற்பனை துவங்கிவிட்டாலும் அதன்விலை காரணமாக பெட்ரோல் கார்களை விட குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகி வருகிறது. குறைந்த விலை கார்களில் ஹைபிரிட் ஆப்ஷன்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டு வந்தாலும் இந்தியாவிலும் அதிகமாக ஹைபிரிட் கார்கள் விற்பனையாகும். ஹைபிரிட் கார்களுக்கு இந்தியா ஏற்ற மார்கெட்டாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 14:15 [IST]
English summary
Hyundai kia hybrid sales in 2025 set to cross one million
மேலும்... #hyundai #kia #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X