மாருதியை யாரும் சீண்டகூட போறதில்ல.. மார்ச் மாசத்துக்காக ஆஃபர்களை வாரி வழங்கும் ஹூண்டாய்..

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை விடுக்கும் விதமாக தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய நோக்கமே இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதே ஆகும். இதன் அடிப்படையிலேயே சிறப்பு பலன்களை வழங்கக் கூடிய திட்டத்தையும் அது உருவாக்கி இருக்கின்றது. அதற்கு 'சூப்பர் டிலைட் மார்ச்' (Super Delight March) என்கிற பெயரையும் அது சூட்டி இருக்கின்றது.

இந்த மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகைக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான வென்யூ (Venue), ஐ20 (i20), கிராண்டு ஐ10 நியாஸ் (Grand i10 NIOS) மற்றும் எக்ஸ்டர் (Exter) ஆகிய கார் மாடல்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Hyundai launches super delight march campaign

இதில் எக்ஸ்டர் கார் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரை சிறப்பு பலன்களையும், ஐ20 கார் மாடலுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான சிறப்பு பலன்களும் வழங்கப்பட இருக்கின்றது. உச்சபட்சமாக வென்யூ கார் மாடலுக்கு ரூ. 55 ஆயிரத்திற்கான பலன்கள் சிறப்பு சலுகையின் வாயிலாக வழங்கப்பட இருக்கின்றது.

இதேபோல், ரூ. 53 ஆயிரத்திற்கான பலன்கள் ஐ10 நியாஸ்-க்கு வழங்கப்பட இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்பிலும் இந்த சிறப்பு சலுகைக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, குறிப்பிட்ட சில டீலர்களும் இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அவர்கள் தரப்பில் வழங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், இந்த மார்ச் மாசத்தில் புதிய ஹூண்டாய் காரை வாங்குவர்களுக்கு இரட்டிப்பான பலன் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஹூண்டாய் நிறுவனம் மேலே பார்த்த இந்த நான்கு கார் மாடல்களை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

முக்கியமாக அவுரா, கிரெட்டா, வெர்னா, அல்கஸார் மற்றும் டக்சன் உள்ளிட்ட கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு உள்ளது. இதுதவிர, ஐயோனிக் 5 மற்றும் கிரெட்டா எலெக்ட்ரிக் போன்ற மின்சார கார் மாடல்களையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இவற்றிற்கு நிறுவனம் எந்தவொரு சலுகையையும் அறிவிக்கவில்லை.

இவற்றிற்கு சலுகை வழங்காமலே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பதே நிறுவனத்தின் எண்ணமாக பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்களும் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களாக இருக்கின்றன. இருப்பினும், சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்ச் மாதத்தை விற்பனை வளர்ச்சியுடன் முடிக்க வேண்டும் என்பதே ஹூண்டாயின் எண்ணமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது ரூ. 55 ஆயிரம் வரை சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக நிறுவனத்தின் எக்ஸ்டர் மற்றும் பிற கார் மாடல்களின் விற்பனை சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டாடா மற்றும் மாருதி போன்ற தன்னுடைய போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை யாரும் சீண்டக் கூடாது என்கிற நோக்கிலேயே இந்த சலுகைகளை அது அறிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2025, 18:27 [IST]
English summary
Hyundai launches super delight march sales campaign offering benefits up to rs 55000
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+