கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையால இருக்கு! ஹூண்டாய் கார் ஷோரூம்களில் கூட்டம் ரொம்ப குறைஞ்சிடுச்சு!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை பிடித்துவந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் ஆட்டம் காட்டி வருகிறது. அதாவது, கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா கடந்த சில மாதங்களாக 2வது இடத்தை தனதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நடந்து முடிந்த கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் வெகுவாக குறைந்து வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா (Creta) காரை தவிர்த்து, மற்ற அனைத்து ஹூண்டாய் கார்களின் விற்பனையும் கணிசமாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக, மாதத்திற்கு 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய ஹூண்டாய் நிறுவனம், கடந்த சில மாதங்களாக 50,000 என்கிற மைல்கல்லை எட்ட முடியாமல் உள்ளது.

hyundai motor car sales report

கடந்த ஜூன் மாதத்திலும் வெறும் 44 ஆயிரத்து 24 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 50 ஆயிரத்து 103 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6 ஆயிரத்து 79 யூனிட்கள் குறைந்துள்ளது.

இருப்பினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 163 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளோம் என ஹூண்டாய் சந்தோஷப்பட்டு கொள்ளலாம். ஏனெனில், கடந்த 2025 மே மாதத்தில் 43 ஆயிரத்து 861 ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hyundai motor car sales report

இவ்வளவு நேரம் நாம் பார்த்தது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் கார்கள் உற்பத்தி செலவு குறைவு என்பதை கருத்தில் கொண்டு, இந்தியாவை வாகன உற்பத்தி மையமாக பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும்.

கடந்த ஜூன் மாதத்திலும் 16 ஆயிரத்து 900 கார்களை ஹூண்டாய் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதுவே, 2024 ஜூன் மாதத்தில் 14 ஆயிரத்து 700 ஹூண்டாய் கார்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி ஆனது 2,200 கார்கள் குறைந்துள்ளது.

hyundai motor car sales report

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 924 கார்களை விற்பனை செய்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 803 ஆக பதிவாகி இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கிய 2025-26ஆம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மொத்தமாக 1 லட்சத்து 80 ஆயிரத்து 399 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 1 லட்சத்து 32 ஆயிரத்து 259 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 48 ஆயிரத்து 140 கார்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஹூண்டாயை முந்தியதால், இந்த தென்கொரிய கார் நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த ஜூன் மாதத்திலும் 44 ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த மாத விற்பனையிலும் ஹூண்டாய் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதா என்பது தெரிய, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் வர வேண்டி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 11:07 [IST]
English summary
Hyundai motor india car sales report of june 2025 check all details here
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X