வெறும் 24 பேர் தான் வாங்கியிருக்காங்க! நல்லா காரா இருந்தும் ஏன் விக்கல தெரியுமா?
ஹூண்டாய் மோட்டார் இந்தியா, 2025 இல் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் ஜனவரி 17 அன்று கிரெட்டா எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் EV சந்தையில் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய விற்பனை எண்ணிக்கையைத் தாண்டும் என கூறப்படுகிறது. தற்போது, ஹூண்டாய் எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் அயானிக் 5 மட்டுமே உள்ளது, இது விற்பனை எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
2024 டிசம்பரில், ஹூண்டாய் அயானிக் 5 24 கார்கள் மட்டுமே விற்றது, இது ஆறு மாதங்களில் இரண்டாவது குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்ட மாதமாகும். இந்த நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் SUV ஐ ரூ. 46.05 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஒரே வேரியன்டில் வழங்குகிறது. விற்பனையை அதிகரிக்க, டிசம்பர் மாதம் ரூ. 2 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டது. இருந்தாலும் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

ஹூண்டாய் Ioniq 5 நீளம் 4634 மிமீ., அகலம் 1890 மிமீ. மற்றும் 1625 மிமீ. உயரம் கொண்டது. இது 3000 மிமீ. வீல் பேஸ் அளவுகளை கொண்டது. உட்புறம் எக்கோ-ஃப்ரெண்ட்லி பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, டேஷ்போர்டு மற்றும் கதவு டிரிம் ஆகியவற்றில் சாஃப்ட் டச் ஃபினினு் செய்யப்பட்டுள்ளன. பிக்ஸல் வடிவமைப்பு கொண்ட ஆர்ம்ரெஸ்ட், சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை இந்த சாஃப்ட் டச் ஃபினிஷ் அலங்கரிக்கிறது.
உள்ளே, இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டச் ஸ்கிரீன் இன்டர்ஃபேஸ் இரண்டாகவும் செயல்படுகின்றன. கூடுதல் வசதிக்காக ஹெட்-அப் டிஸ்ப்ளேவும் சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஒரு மல்டி-கொலிஷன் தடுப்பு பிரேக் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அயானிக் 5 கார் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படும் பின்புற வீல் டிரைவ் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 217hp பவரையும் 350Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இது 72.6kWh பேட்டரி பேக்கை வைத்திருக்கிறது, இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 631 கி.மீ. வரை ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் 800 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது, இது வெறும் 18 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, இது 21 பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு சப்பாேர்ட்டாக லெவல் 2 ADAS இன் அம்சத்தை கொண்டது.

| மாதம் | விற்பனையான யூனிட்கள் |
|---|---|
| ஜூலை | 36 |
| ஆகஸ்ட் | 40 |
| செப்டம்பர் | 31 |
| அக்டோபர் | 32 |
| நவம்பர் | 22 |
| டிசம்பர் | 24 |
| மொத்த விற்பனையான யூனிட்கள்: | 185 |
ஜூலை முதல் டிசம்பர் வரை அயானிக் 5 காரின்ன் மொத்த விற்பனை வெறும் 185 கார்கள். இந்த எண்கள் இருந்தபோதிலும், ஹூண்டாய் தனது வரவிருக்கும் கிரெட்டா எலெக்ட்ரிக் அப்டேட்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறது மற்றும் மார்கெட்டில் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய HDPI பொருளை பயன்படுத்தி, மோதல் தடுப்பான் மற்றும் ஸ்டீயரிங் வீல் போன்ற பல்வேறு கூறுகளில் பயோ பெயிண்ட் செய்துள்ளது, இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஸ்டெபிளிட்டி கொள்கைக்கான முயற்சிகளை மேலும் மேம்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரின் அறிமுகம், ஸ்டபிளிட்டி டிரைவ் தீர்வுகளில் ஆர்வமுள்ள அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், இந்தியாவின் EV பிரிவில் ஹூண்டாயின் இருப்பை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என நம்பபடுகிறது. அயானிக் காரின் விலை அதிகமாக இருப்பதால் குறைவான நபர்கள் மட்டுமே இந்த காரை வாங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications









