டாடா, மாருதி கம்பெனிக்கு எல்லாம் புது தலைவலி ஸ்டார்ட்! ஹூண்டாய் நவ.4இல் அறிமுகப்படுத்தும் காருக்கு வெயிட்டிங்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம், தனது புதிய வென்யூ (Venue) காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய வென்யூ, இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவில் மகிழ்ச்சியான பயணம், சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் என்று ஹூண்டாய் கூறியுள்ளது.

மேலும் புதிய வென்யூ காரை, விருப்பப்படுபவர்கள் இப்போதே டீலர்ஷிப் ஷோரூம்களிலும், ஆன்லைனிலும் ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவித்து, காரின் என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மூன்று வெவ்வேறு என்ஜின் ஆப்ஷன்களுடன் புதிய வென்யூ வரவுள்ளது.

new hyundai venue suv engine options

அதன்படி, புதிய வென்யூவில் வழங்கப்பட உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அன்றாட பயணங்களுக்கு ஏற்ற மென்மையான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். அதேசமயம், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், வேகமான பயணத்தை விரும்புவோருக்கு சிறந்தது.

இதனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். மேலும், இந்த டர்போ பெட்ரோல் என்ஜினை தேர்வு செய்தால் காரில் ஐடில் ஸ்டாப் & கோ அம்சமும் கிடைக்கும். மூன்றாவது என்ஜின் ஆப்ஷனான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதன் பிரிவில் சக்திவாய்ந்த மற்றும் சிக்கனமான டீசல் என்ஜின் ஆப்ஷனாக விளங்குகிறது.

new hyundai venue suv engine options

இதுவும் மேனுவல் மற்றும் புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 PS மற்றும் 114.7 Nm டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 PS மற்றும் 172 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

அதுவே, 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 116 PS மற்றும் 250 Nm டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியது ஆகும். புதிய வென்யூவில், மணல், சேறு மற்றும் பனிப்பொழிவுக்கான டிராக்‌ஷன் கண்ட்ரோல் மோட்கள் போன்ற மேம்பட்ட டிரைவிங் மோட்கள் வழங்கப்பட உள்ளன.

new hyundai venue suv engine options

மேலும், ஓட்டுநரின் மனநிலை மற்றும் சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் போன்ற வெவ்வேறு டிரைவ் மோடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் வேடிக்கையான மற்றும் ஸ்போர்ட்டியான ஓட்டுநர் அனுபவத்திற்காக, குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் பேடில் ஷிஃப்டர்கள் கிடைக்கும். புதிய வென்யூ சக்திக்கு மட்டுமின்றி, வசதிக்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது நவீன இன்டீரியர்கள் மற்றும் எளிமையான தொழிற்நுட்ப அம்சங்களுடன் மென்மையான மற்றும் நிதானமான ஓட்டத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, புதிய வென்யூ எஸ்யூவி உற்சாகமான, நம்பகமான மற்றும் இந்திய வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் வென்யூ கார் வருகிற நவம்பர் 4ஆம் தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

new hyundai venue suv engine options

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே வென்யூ காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், புதிய வென்யூ கார் மூலம் இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் புதிய தரநிலையை அமைப்பதை ஹூண்டாய் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் இந்த காரின் என்ஜின் குறித்த புள்ளி விவரங்கள் வென்யூ அதன் பிரிவில் சக்தி மற்றும் செயல்திறனை சமநிலைப்படுத்தும் சிறந்த எஸ்யூவிகளில் ஒன்றாகத் தொடரும் என்பதைக் காட்டுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2025, 23:25 [IST]
English summary
Hyundai motor india revealed new venue suv engine options ahead of launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X