மைலேஜ் தரதுல ஹூண்டாயின் இந்த காருக்கு முன்னாடி மற்ற நிறுவன கார்கள் எல்லாம் குழந்தை.. டிரையல்ஸ் தொடங்கியாச்சு!!

அதிகம் மைலேஜ் தரும் கார் ஒன்றின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. நெக்ஸோ (Nexo), இந்த காரின் சோதனையோட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (Hydrogen Fuel Cell)லில் இயங்கும் வாகனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே இந்த வகை வாகனமும் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக விளங்கக் கூடியவை என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இந்த மாதிரியான வாகன பயன்பாட்டை இந்திய அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இன்னும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இந்த நிலை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஹூண்டாய் நிறுவனத்தின் தற்போதைய செயல் அமைந்திருக்கின்றது. அதாவது, ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய இந்த நெக்ஸோ காரை சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hyundai nexo trials for sustainable mobility in india

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அந்த காரின் சோதனையோட்டம் இந்தியாவில் தற்போது தொடங்கி இருக்கின்றது. மேலும், இந்த காரின் சோதனையோட்டத்தை இந்தியாவில் தொடங்கியிருப்பதால் ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கின்றது. இந்த இணைவின்கீழ் இந்தியன் ஆயில் நிறுவனம் ஹைட்ரஜன் சப்ளையை ஹூண்டாய்க்கு வழங்க இருக்கின்றது.

மேலும், எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அது ஹைட்ரஜன் ஃப்யூவல் விநியோகத்தை நாட்டில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கூட்டணியின்கீழ் இந்தியன் ஆயில் நிர்வாகம் ஹூண்டாய் நெக்ஸோ காரை இந்தியாவின் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் வைத்து ஓட்டி பார்க்க இருக்கின்றது.

Hyundai nexo front-profile

இதற்காக ஒரு யூனிட் நெக்ஸோ காரையும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியன் ஆயில் இடம் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் சோதனையோட்ட பணிகளே இப்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது. சுமார் 40 ஆயிரம் கிமீட்டருக்கு இந்த கார் ஓட்டி சோதனையோட்டம் செய்யப்பட இருக்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக இந்த நீண்ட தூர பயணத்தை முடிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதற்குள்ளாகவும் இந்த சோதனையோட்டம் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக இந்த சோதனையோட்டத்தின் மூலம் நெக்ஸோ கார் இந்தியாவிற்கு பொருத்தமானதாக இருக்குமா?, இந்தியர்களின் தேவைகளை அது பூர்த்தி செய்யுமா? என்பது போன்ற முக்கிய தகவல்களே கண்டறியப்பட இருக்கின்றது.

Hyundai nexo rear profile

இதுதவிர, இந்த கார் என்ன மாதிரியான பராமரிப்பு செலவை வழங்கும் என்பது போன்ற முக்கிய தகவல்களையும் சோதனையோட்டத்தின் வாயிலாகக் கண்டறிய இருக்கின்றனர். ஹூண்டாயின் இந்த தயாரிப்பு இந்தியாவிற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், உலக சந்தையில் ஏற்கனவே இந்த கார் விற்பனையில் இருக்கின்றது.

குறிப்பாக, நல்ல வரவேற்புடன் அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களையும் வளைத்துப் போடும் விதமாக நெக்ஸோ காரை நாட்டில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த காரில் ஒரே ஒரு முறை ஹைட்ரஜனை முழுமையாக நிரப்பினால் 666 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Hyundai nexo rear design

இந்த வாகனம் நேரடியாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லிங் இயங்காது. இதனை மின்சாரமாக மாற்றி அதன் வாயிலாகவே இயங்கும். தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலை சேகரிக்க 40 kW பேட்டரி பேக் நெக்ஸோ காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், அதிக ஆற்றலை உருவாக்கும் மின்சார மோட்டாரே நெக்ஸோவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த எந்த அளவிற்கு ஆற்றலை உருவாக்கும் என்றால், அதிகபட்சமாக 183 பிஎஸ் மற்றும் 395 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதே அது ஆகும். மேலும், இந்த வாகனத்திற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 9.2 செகண்டுகளே போதுமானது ஆகும்.

இதுமட்டுமல்ல இந்த காரில் முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்ப வெறும் 5 நிமிடங்களே போதுமானது. இந்த வசதியின் காரணமாகவே வழக்கமான எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் அதிக சிறப்புமிக்க வாகனமாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் அறியப்படுகின்றன. அதிக ஆற்றலை உருவாக்குவது, மைலேஜ் தருவதில் மட்டுமே இந்த கார் சிறப்பானது கிடையாது.

ஆடம்பர அம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த வாகனம் மிக சிறந்த ஒன்றாக விளங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக இந்த காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை ஹூண்டாய் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்துடன் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களுக்கு இரட்டிப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, சென்ற 2025 ஆம் நிதியாண்டில் அது 100 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. எனவே நெக்ஸோவிற்கும் இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெக்ஸோ காரில் வழங்கப்பட்டு இருக்கும் அடாஸ் அம்சத்தின் வாயிலாக பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், லேன் கீப் அசிஸ்ட், ஹைவே டிரைவ் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் ஸ்டேடிக் லோ பீம் அசிஸ்ட் போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹூண்டாய் நிறுவனம் அடாஸ் அம்சத்தை மட்டுமல்ல அதிக இட வசதி, சிறந்த வடிவமைப்பு மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றையும் பரந்த அளவில் வழங்கி இருக்கின்றது. இத்தகைய வாகனத்தின் சோதனையோட்டத்தையே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் இந்த வாகனம் தரிசனம் வழங்குவது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வைத்தே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்தியது. அப்போதே பலரின் கவனத்தை அது கவர்ந்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 7 அங்குல டிஜிட்டல் திரை உள்ளிட்டவற்றுடனேயே இந்த கார் நாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் இந்த கார் மட்டும் விற்பனைக்கு வரும் எனில் மைலேஜ் தருவதில் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அப்பனை போல ஆகும். இதேபோல், இந்த வாகனத்தில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்ப பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தேவைப்படுவதைப் போலவே சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இது நாட்டில் விற்பனைக்கு வந்தால் இ-கார்களுக்கே விற்பனையில் டஃப் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 20:40 [IST]
English summary
Hyundai nexo hydrogen car trials in india to explore sustainable mass mobility solutions
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X