ஹூண்டாய், டாடாவை விட இந்த கார் கம்பெனியை தான் எல்லாரும் தேடி வராங்க! மாருதிக்கு அடுத்து இப்போ இதுதான்
ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் முன்னணியில் விளங்கும் ஹூண்டாய், நம் நாட்டில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் எத்தனை கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது என்பதையும், வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் ஹூண்டாய் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதையும் பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தை பிடிப்பது வழக்கம். எப்போதாவது அரிதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை பிடிப்பதை கடந்த ஆண்டுகளில் பார்த்துள்ளோம். ஆனால், கடந்த 2025 பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் மிக பெரிய சர்பிரைஸ் நடந்துள்ளது.

ஏனெனில், மாருதி சுஸுகிக்கு அடுத்து கார் விற்பனையில் ஹூண்டாயும் 2வது இடத்தை பிடிக்கவில்லை; டாடா மோட்டார்ஸும் 2வது இடத்தை பிடிக்கவில்லை. இவை இரண்டையும் முந்திக் கொண்டு மஹிந்திரா 2வது இடத்தை தனக்கு சொந்தமாக்கி அனைத்து கார் நிறுவனங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் ஒவ்வொரு மாதத்திலும் அசால்ட்டாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்யக்கூடியது ஆகும். ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் வழக்கத்தை காட்டிலும் குறைவாக 47 ஆயிரத்து 727 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பொதுவாக, குறைவான நாட்களை கொண்ட பிப்ரவரி மாதத்தில் கார்கள் விற்பனை சற்று குறைவாகவே பதிவாகுவது வழக்கம்.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹூண்டாய் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 2.93% குறைந்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 50 ஆயிரத்து 201 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து இருந்தது. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் சுமார் 54 ஆயிரத்து 3 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை ஆகும். இது இல்லாமல், கடந்த பிப்ரவரி மாதத்தில் 11 ஆயிரம் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த 11 ஆயிரத்தை சேர்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 58 ஆயிரத்து 727 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே, 2024 பிப்ரவரி மாதத்தில் 10 ஆயிரத்து 300 கார்கள் ஏற்றுமதி உடன் மொத்தம் 60 ஆயிரத்து 501 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ஹேட்ச்பேக் கார்கள், செடான் கார்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் என பல்வேறு விதமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. ஆனால், இந்த சிறிய இடைவெளியில் புகுந்து மஹிந்திரா நிறுவனம் 2வது இடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளது. ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைந்துள்ள போதிலும், ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் முந்த முடியவில்லை என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









