உலக நாடுகள் அனைத்தும் இந்த காரை பற்றிதான் பேசிட்டு இருக்கு.. ஹூண்டாய் தயாரித்த இந்த கார் அவ்ளோ சூப்பரானதா!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத ஹூண்டாய் (Hyundai) கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸோ (Nexo) உள்ளது. இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே ஹூண்டாய் நிறுவனம் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இரண்டாம் தலைமுறை வெர்ஷன் (Second Generation)-னையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. கொரியாவில் நடைபெற்று வரும் சியோல் மொபிலிட்டி ஷோ (Seoul Mobility Show) வாயிலாகவே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. நெக்ஸோ ஓர் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார் (Fuel Cell Electric Vehicle) மாடல் ஆகும்.

வழக்கமான மின்சார காரைப் போல் இல்லாமல் இது ஃப்யூவல் செல்லை நம்பி இயங்கக் கூடிய ஓர் மின்சார கார் மாடல் ஆகும். வழக்கமான மின்சார காரை சார்ஜ் செய்ய இ-வாகன சார்ஜிங் மையங்களின் உதவி கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆனால், ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்க ஹைட்ரஜன் ஃப்யூவல்-லே போதுமானது.

Hyundai nexo fcev pic

இதனை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றை நிரப்புவதைப் போல நொடிப்பொழுதில் நிரப்பிவிட்டு புறப்பட முடியும். இத்தகைய கார் மாடலையே உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி வாயிலாக ஹூண்டாய் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸோ-வைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக புதிய தலைமுறை நெக்ஸோ-வின் லுக் உள்ளது.

இந்த மிட் சைஸ் எஸ்யூவி கார் பற்றிய முக்கிய விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதேவேளையில், இதை 5 நிமிடம் செலவிட்டு ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினாலேயே அது 700 கிமீ தூரம் வரை பயணிக்கும் வகையில் ஹூண்டாய் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hyundai nexo fcev interior design

இதேபோல், இனிஷியம் கான்செப்ட் (INITIUM concept) மாடலைத் தழுவியே புதிய தலைமுறை நெக்ஸோ ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. தொடர்ந்து, பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக ஒன்பது ஏர் பேக்குகள், பாதுகாப்பு திறன்மிக்க ஹைட்ரஜன் டேங்க், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System) உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இதுமட்டும் அல்ல மோதலின் போது பாதுகாப்பை வழங்கக் கூடிய அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இத்துடன், பெரிய அளவில் இரைச்சலை ஏற்படுத்தாத வாகனமாகவும் இதனை ஹூண்டாய் நிறுவனம் தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதற்காக, ஒலியை உள்வாங்கும் வசதிக் கொண்ட டயர் நோக்ஸோ காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Hyundai nexo fcev front design

இதுமட்டுமல்ல ஆக்டீவ் நாயஸ் கன்ட்ரோல் (ANC-R) அம்சமும் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், ஹூண்டாயின் இந்த கார் மற்ற ஹூண்டாய் கார்களைக் காட்டிலும் அதிக சைலண்டான வாகனமாக இருக்கும் என தெரிகின்றது. இந்த அம்சத்திற்காகவும், தனித்துவமான தோற்றத்திற்காகவும் உலக நாடுகள் அனைத்தும் நெக்ஸோ காரை பற்றி பேச தொடங்கி இருக்கின்றன. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாயின் பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், நெக்ஸோ விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், வேறு சில நிறுவனங்கள் இந்தியாவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 17:17 [IST]
English summary
Hyundai s nexo fuel cell electric vehicle showcases advanced technology at seoul mobility show
மேலும்... #hyundai #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X