31 நாளில் 60,000 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! அப்படி எந்த கம்பெனி இது!

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 60,501 வாகனங்களை விற்பனை செய்து மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் 44,001 வாகனங்கள் உள்நாட்டிலும், 16,500 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை வெளியிறட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூல மாதம் மட்டும் 60,501 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 44,001 வாகனங்களும், 16,500 வாகனங்கள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் நடந்த விற்பனையை விட 21 சதவீத விற்பனையை பெற்றுள்ளது.

Hyundai Sales August 2025

இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 1,18,840 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் மத்திய தயாரிப்பு மையமாக மாற்றியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக வாகனங்களை விற்பனை செய்து ஒரு கம்பேக் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என அனைத்து வகை கார்களையும் விற்பனை செய்கிறது.

இந்நிறுவனம் அடுத்ததாக 3ம் தலைமுறை வென்யூ காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த கார் தற்போது உள்ள மாடலில் இருந்து அதிக வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பா்கப்படுகிறது. இதன் டிசைன் தற்போது விற்பனையாகி வரும் கிரெட்டா, ஆல்கஸார் ஆகிய கார்களிலிருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய மாற்றம் என்றால் வெர்டிகலாக வைக்கப்பட்ட ஹெட்லைட், கிரில் மற்றும் டிஆர்எல் ஆகிய அம்சங்கள் தான்.

Hyundai Sales August 2025

இதன் பாடிபேனல்கள் ரீ ஒர்க் செய்யப்பட உள்ளன. புதிய அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ரீ ஸ்டைல் செய்யப்பட்ட பம்பர் மற்றும் டெயில்கேட் ஆகிய அம்சங்கள் உள்ளன. பின்பக்க லைட் வடிவமைப்பு மற்றும் ஸ்பாய்லர்கள் மாற்றியமைக்கப்படவு்ளன. மெக்கானிக்கல் விஷயத்தில் தற்போது உள்ள செட்டப்பை மாற்ற அந்நிறுவனம் திட்டமிடவில்லை.

இந்த காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. முக்கியமாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படகிறது. இதில் டுயல் பேன் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு, சென்டர் சன்சோல் பகுதியும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய அப்ஹோல்சரிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு எப்பொழுது வரும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Hyundai Sales August 2025

ஹூண்டாய் நிறுவனம் சிறப்பான வாகனங்களை தயாரித்து வருகிறது. மாருதிக்கு அடுத்த இரண்டாம் இடத்திற்கு ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக போராடி பெரும்பாலான மாதங்களில் இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களும் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

கடந்த மாதம் முதல் 15 நாட்கள் விற்பனை நன்றாக இருந்த நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசு காத்திருப்பதாக கூறினார். இந்நிலையில் வரும் தீபாவளிக்கு பிறகு தான் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். அதுவரை விற்பனை மந்தமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் ஜிஎஸ்டி குறைவதற்காக காத்திருக்கிறீர்களா என்பதை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இதை வைத்து இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்ய துவங்கிவிட்டது. இது நிச்சயம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பங்க வகிக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 2, 2025, 7:00 [IST]
English summary
Hyundai sales august 2025 60000 units 21 growth
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X