புது வென்யூ வந்த பலன்! ஒரே மாசத்துல 50,000 இந்தியர்கள் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!
டிசம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இன்படி இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 66,840 வாகனங்களை வறி்பனை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான அறிக்கையையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சேர்த்து மொத்தம் 66,840 வாகனங்களை இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது.

இதில் உள்நாட்டில் மட்டும் மொத்தம்50,340 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனையைவிட 4.3 சதவீதம் அதிகம் அகும். இதில் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவிகள் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 16,500 வாகனங்கள் சர்வதேச விற்பனையை பெற்றுள்ளது. இது கடந்தாண்டுஇதே காலகடத்தில் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 26.9 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த சிறப்பான விற்பனையை பெற புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ கார் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் எஸ்யூவி வாகன விற்பனையை அதிகரித்துள்ளது. இந்த கார் அறிமுகமாகி வெறும் 1 மாதம் தான் ஆகும் நிலையில் 32,000 புக்கிங்கள் குவிந்துள்ளது. டிசைன் மொழியில் செய்யப்பட்ட அப்டேட், NVIDIA பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய இந்த செக்மெண்டில் உள்ள மற்ற போட்டியை ஒப்பிடும் போது தனித்துவப்படுத்தி காட்டுகிறது.

புதிய வென்யூ கார் ரூ7.89 லட்சம் என்ற விலையில் துவங்கி அதிகபட்சமாக ரூ15.48 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பல்வேறு இன்ஜின், கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஸ்போர்ட்டி என்லைன் வேரியன்டும் விற்பனையாகி வருகிறது. இது எச்எக்ஸ் 2 மற்றம் எச்எக்ஸ் 10 வேரியன்ட்களுக்கு இடையே இன்ஜின் வித்தியாசம் இல்லாமல் புதிய ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்தியாவில் கடந்த செப் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனை அதிகரிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் ஹூண்டாய் நிறுவனமும் பலன் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக குறைந்தது. இது போக பண்டிகை காலம் வேறு வந்தது. இந்த காலகட்டத்தில் வழக்கமாகவே விற்பனை அதிகமாகும். பண்டிகை காலம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் மக்கள் விலை குறைந்தததால் கார்களை வாங்கி குவித்ததனர்.இந்தஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்கள் தொடர்ந்து வாகன நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் உள்நாட்டில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை தயாரித்துள்ளது. இது நிச்சயம் அந்நிறுவனத்திற்கு நல்ல வளர்ச்சி தான்.


Click it and Unblock the Notifications









