30 நாளில் 70 ஆயிரம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! எந்த கம்பெனி தெரியுமா?
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 69,894 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய கார்கள் இதுவரை விற்பனையானதிலேயே இரண்டாவது அதிகபட்ச கார்களை விற்பனை செய்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கிடைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 53,792 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுபோக 16,102 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்தாண்டு அக்டோர் மாதம் நடந்த ஏற்றுமதியை விட 11 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மாதம் தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வந்தநிலையில் இந்த காலகட்டத்தில் அதிக கார்கள் விற்பனையாகும் என்பதால் இந்த வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இது மட்டுமல்ல ஜிஎஸ்டி2.0 அமலுக்கு வந்ததால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.இதனால் இந்த விற்பனை வளர்ச்சி ஏற்றபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விற்பனைக் குமக்கியமாகக இருந்தது. வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய 2 கார்களின்விற்பனை தான். இந்த இரண்டு கார்களும் சேர்ந்து மொத்தமாக 30,119 கார்களை விற்பனை செய்துள்ளது. காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்களில் இந்த கார்கள் சிறப்பான போட்டியை வழங்கி வருகிறது.

இதற்கிடையில் இந்நிறுவனம் தனது வென்யூ காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.இதற்கான புக்கிங் எல்லாம் துவங்கிவிட்டது. வரும் 4ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இதில் இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு சிறப்பாக மாற்றப்பறட்டுள்ளது. இது போக பிரிமியமான உட்புற கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், கனெக்டிவிட்டி அம்சங்கள் எல்லாம் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் பெரிய கிரில், ஸ்லீக்கான எல்இடி லைட்டிங் சிஸ்டம், புதிய அலாய் வீல்கள், பின்பக்கம் கனெக்டெட் எல்இடி லைட் பார், லெவல் 2 அடாஸ், டுயல் ஸ்கிரீன்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டள்ளது. இன்ஜினை பொருத்தவரை அதே 1.2 லிட்டர், 1.0 லிட்டர் டர்போ, 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த காரின் வடிவமைப்பே பெரிய அளவில் மாறப்போகிறது. இதனால் இன்னும் இந்த காரின் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் பெரிய அளவில் மார்கெட்டில் வெற்றிபெறும்.
இந்த நிறுவனம் தற்போது எஸ்யூவி செக்மெண்டல் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் சிறிய கார்களின் விற்பனை குறைந்துவிட்டதால் பெரிய அளவில் விற்பனையை பெற முடியாமல் இந்நிறுவனம் தவிக்கிறது. இந்நிறுவனத்தில் சிறிய ரக கார்கள் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் விற்பனையானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 70,000 கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









