லிட்டருக்கு 20கிமீ மைலேஜ் தரும் காரை வாங்கினால் ரூ.75,000 தள்ளுபடி! கிள்ளி கொடுக்காம அள்ளி கொடுத்த ஹூண்டாய்!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய கொரியன் கார் நிறுவனம். இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் எளிதாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்கிறது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹூண்டாய் நிறுவனம் அவ்வப்போது தனது கார்களுக்கு சலுகைகளை வழங்குவது ஆகும். அந்த வகையில் தற்போது மீண்டும் ஹூண்டாய் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் ஒன்றான நம் இந்தியாவில் கார்களின் விலைகளை மிக முக்கியமாக பார்த்து வாங்குபவர்களே அதிகமாக உள்ளனர். இதனாலேயே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களின் விற்பனை மிக சிறப்பாக உள்ளது. மேலும், கஸ்டமர்களை கவரும் பொருட்டு அவ்வப்போது கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப் படுகின்றன.

hyundai special offers

குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் இவ்வாறான கார் சலுகைகள் மக்களை வெகுவாக கவர்வதை உணர்ந்த கார் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். இதன் காரணமாகவே, அடிக்கடி எதாவது ஒரு காரணத்தை சொல்லி கார்களுக்கு சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஹூண்டாய் நிறுவனம் அந்த வகையில் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு இந்த மே மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகளில் அனைத்து ஹூண்டாய் கார்களும் அடங்கவில்லை. அதாவது, குறிப்பிட்ட சில ஹூண்டாய் கார்களுக்கு மட்டும் இந்த கோடை கால சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவையாவன, ஹூண்டாய் வென்யூ (Venue), எக்ஸ்டர் (Exter), ஐ20 (i20), கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) என்பன ஆகும்.

hyundai special offers

மே 3ஆம் தேதியில் இருந்தே ஹூண்டாய் ஷோரூம்களில் வழங்கப்பட்டு வரும் இந்த கோடைக்கால சலுகைகள் மே 31ஆம் தேதி வரையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அதிகப்பட்சமாக ரூ.75,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம். ரூ.75,000 வரையிலான சலுகைகளை பெற நீங்கள் ஹூண்டாய் வென்யூ காரை வாங்க வேண்டும்.

வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.94 லட்சத்தில் இருந்து ரூ.13.62 லட்சம் வரையில் உள்ளன. வென்யூவுக்கு அடுத்து அதிகப்படியாக, கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு அதிக மதிப்பிலான சலுகைகளை ஹூண்டாய் வழங்கியுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான கார்களுள் ஒன்றாக உள்ள கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.65 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.5.98 லட்சத்தில் இருந்து ரூ.8.62 லட்சம் வரையில் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விலைகள் உள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஐ20 கார்கள் ஒரே மாதிரியாக ரூ.55,000 வரையிலான சலுகைகளை பெற்றுள்ளன. எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.21 லட்சத்தில் இருந்தும், ஐ20 காரின் விலைகள் ரூ.7.04 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக சமீபத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா (Mahindra) 2வது இடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியது. ஹூண்டாய் கார்கள் விற்பனையில் முன்னேற்றத்தை கொண்டுவர இந்த கோடைக்கால சலுகைகள் உதவலாம். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் (Dealership) ஷோரூமை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 15, 2025, 5:00 [IST]
English summary
Hyundai special offers on venue grand i10 nios exter i20 cars
மேலும்... #hyundai #offers #special offer #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+