மினி ஆம்புலன்ஸாக, மினி பேருந்தாக, மினி லோடு வண்டியாக என அனைத்துமாக பயன்படும்.. ஹூண்டாயோட இந்த கார் வேற ரகம்!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக ஓர் புதுமுக கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. அது வெளியீடு செய்திருப்பது புத்தம் புதிய எம்பிவி (MPV) ரக ஸ்டாரியா (Staria) கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவிற்கு வேண்டுமானாலும் புதியதாக இருக்கலாம்.

உலக சந்தைக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடலே இதுவாகும். பெரிய குடும்பங்களுக்கான காராக இது உலக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. 9 மற்றும் 11 சீட்டர்கள் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமல்ல இன்னும் பலதரப்பட்ட இருக்கைகள் தேர்வில் ஸ்டாரியா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Hyundai staria auto expo 2025

இத்தகைய அதிக இருக்கைகளைத் தாங்கிய ஓர் கார் மாடலையே இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2025-இல் வைத்து ஹூண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருப்போரைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. ஆனால், இந்த காரை இப்போது வாங்க முடியாது. அதில் ஓர் சிக்கல் உள்ளது.

இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தலை மட்டுமே செய்திருக்கின்றது. எனவேதான் இந்த காரை வாங்குகின்ற எண்ணம் வந்திருந்தாலும் அதை வாங்க முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது. மேலும், ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற தகவலும் வெளியாகவில்லை.

Hyundai staria mpv interior

விரைவில் இதுபற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை அதிக பயணிகள் பயணிக்க மட்டுமல்ல, சமயத்திற்கேற்ப லோடு வண்டியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, மாருதி ஆம்னி கார் எப்படி பலநிலைகளில் பயன்டுத்தப்பட்டதோ அதை போலவே இந்த ஸ்டாரியாவும் பயன்படும்.

மினி ஆம்புலன்ஸாக, மினி பேருந்தாக, மினி லோடு வண்டியாக என அனைத்துமாக இந்த வாகனம் பயன்படும். அதேநேரத்தில் சொகுசான டிராவலை வழங்க இந்த வாகனம் கொஞ்சமும் தவறாது. ஆகையால், பணக்காரர்களின் கவனத்தை இந்த வாகனம் நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக விமானத்தில் வழங்கப்படுவதைப் போல ஹைகிளாஸ் சொகுசு இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Hyundai staria rear

ஹூண்டாயின் மற்ற தயாரிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. மினி பஸ் அல்லது மாருதி ஆம்னிக்கு பெரிய உருவம் கொடுத்ததைப் போன்ற இதன் லுக் உள்ளிது. குறிப்பாக, இதன் ஹெட்லைட்டாக ஐஸ் க்யூப் வடிவிலான எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, ஷட்டரைப் போன்ற கிரில், கவர்ச்சியான அலாய் வீல், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், யுஎஸ்பி சார்ஜர், 8 அங்குல பெரிய திரை மற்றும் 10.25 அங்குல கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷன் சிஸ்டம், போஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய காரையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் ஹூண்டாய் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதனால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. ஆகையால், இது எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பணக்காரக் குடும்பங்களின் பிரியமான கார் மாடலாக அது மாறும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 13:30 [IST]
English summary
Hyundai staria mpv showcased in india at bharat mobility global expo 2025 with premium features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X