பெரிய சைஸ் ஆம்னி போலிருக்கு.. ஹூண்டாய் இந்த கார இந்தியால காட்சிப்படுத்த போகுதா! ஒரு பட்டாளத்தையே கூட்டி போலாம்
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், ஆம்னி (Omni)-க்கு பெரிய உருவம் கொடுத்த மாதிரியான ஓர் காரை இந்தியாவில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் வாகன ஆர்வலர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) தொடங்க இருக்கின்றது. இந்த உலக புகழ் பெற்ற வாகன கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றன.
அந்தவகையில், உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாயும் இந்த உலக மேடையைப் பயன்படுத்தி தன்னுடைய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக ஸ்டாரியா (Staria) எனும் கார் மாடல் உள்ளது.

இந்த காரை அது இந்தியாவில் காட்சிப்படுத்த இருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கின்றன. ஸ்டாரியா ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். பெரிய உருவம், அதிக இட வசதி மற்றும் பன்மடங்கு பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றை தாங்கி இருக்கக் கூடிய ஓர் வாகனமாகும்.
இதனையே டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து காட்சிப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஆகையால், இந்த ஆட்டோ எக்ஸ்போ கோலகலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்கள் தங்களின் அசத்தலான தயாரிப்புகளை இங்கு வைத்துக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றன.

ஆகையால், இதன் தொடக்க நாளுக்காக இந்தியர்கள் மிகப் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை கூட்டும் விதமாகவே ஸ்டாரியாவை ஹூண்டாய் காட்சிப்படுத்த இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன. ஸ்டாரியா-வை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே ஹூண்டாய் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்தியாவிற்கு வேண்டுமானால் இது புதுமுக கார் மாடலாக இருக்கலாம், ஆனால், உலக சந்தைக்கு இது ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் ஆகும். ஆமாங்க, உலக சந்தையில் இந்த கார் மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றது.
சொல்லப்போனால் ஃபோக்ஸ்வேகன் ஐடி பஸ் போன்ற முன்னணி பிரீமியம் தர கார் மாடல்களுக்கு இது மிகப் பெரிய போட்டியாளனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. மிக சிறந்த எதிர்ப்பை இந்த கார் மாடல் வழங்க வேண்டும் என்பதற்காக பன்முக எஞ்சின் ஆப்ஷன்களை இந்த கார் மாடலில் ஹூண்டாய் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஹைபிரிட், வி6 பெட்ரோல், பெட்ரோல் எல்பிஜி மற்றும் டீசல் ஆகிய ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன. ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வெர்ஷனில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரும், வி6 மற்றும் பெட்ரோல்/எல்பிஜி தேர்வில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினும், டீசல் தேர்வில் 2.2 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சின் ஆகிய மோட்டார்களே ஸ்டாரியா காரில் வழங்கப்படுகின்றது.
இந்த காரில் எஞ்சின் ஆப்ஷன்கள் மட்டுமல்ல இருக்கை ஆப்ஷன்களும் அதிகம். அந்தவகையில், 9,11 என பன்முக இருக்கைகள் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுகின்றன. அனைத்து ஆப்ஷன்களும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்தவை ஆகும். இதுமட்டுமல்ல தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் இந்த கார் மிக சிறந்ததாக உள்ளது.
அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் அடாஸ் போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமல்ல பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு இந்த காரில் சூடாகும் மற்றும் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
தொடர்ந்து, முன் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் வகை டோர்கள், பார்க்கிங் சென்சார்கள், லக்கேஜ்க்கு என தனி இடம், ஃபோல்டபிள் சேர் போன்ற அம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய காரையே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விரைவில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த அதிக இருக்கைகளைக் கொண்ட மினி வேன் போன்ற எம்பிவி ரக கார் மாடலை நாட்டில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது, ஹூண்டாய். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









