11 லட்சம் பேர் இந்த விஷயம் இருக்குற காரை தான் வாங்கியிருக்காங்க! அப்படி இதுல என்ன இருக்குது?
ஹூண்டாய் நிறுவனம் சன்ரூஃப் கொண்ட கார்களை 11 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. மொத்தம் 5 ஆண்டுகளில் இந்த சாதனையை செய்துள்ளது. சன் ரூஃப் என்பது ஒரு சொகுசு காருக்கான அம்சமாக பார்க்கப்படும் நிலையில் இத்தனை லட்சம் பேர் இந்த அம்சம் கொண்ட காரை வாங்கியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம் தான். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்கள் விற்பனை பல முக்கியமான பரிணாமங்களை சந்தித்து வருகிறது. தற்போது உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது கார்களில் சன்ரூஃப் பொருத்தப்பட்ட கார்களை அதிகம் விற்பனை செய்கின்றனர். மக்கள் மத்தியில் வாகனங்களில் இந்த அம்சம் அதிகம் விரும்பபடுவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ரக வாகனங்களை தான் தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஹூண்டாய் நிறுவனம் ஒட்டு மொத்மாக விற்பனை செய்த கார்களில் பாதிக்கும் அதிகமான கார்களில் சன்ரூஃப் ஆப்ஷன் இருக்கிறது. இது மட்டுமல்ல இந்த டிரெண்ட் இந்த 2025ம் ஆண்டிலும் தொடர்கிறது. முதல் 6 மாதங்களில் இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களில் 54 சதவீதமான வாகனங்கள் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வாகனங்களாவே உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இதுவரை இந்திய மார்கெட்டில் 14 மாடல்களில் கார்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அதில் 12 மாடல் கார்களில் சன்ரூஃப் ஆப்ஷன் இருக்கிறது. இந்த அம்சம் பல்வேறு செக்மெண்ட்களிலும், பல்வேறு விலை கொண்ட கார்களிலும் ஒரு பொதுவான ஆப்ஷனாக மாறி வருகிறது. இந்நிறுவனம் இந்திய மார்கெட்டில் பானரோமிக் சன்ரூஃப் கருவியை இந்தியாவிலேயே தயாரிப்பதால் குறைவான விலையில் இந்த அம்சங்களை தங்கள் வாகனங்களில் பொருத்த முடிகிறது.

இந்த அம்சத்தை தங்கள் வாகனங்களில் தருவது மூலம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வேல்யூ, கம்ஃபோர்ட், லைஃப்லைட் ஆகியவற்றை விரும்பும் வாகடிக்கையாளர்களை எளிதாக கவர முடிகிறது. அதே நேரம் சர்வதேசஅளவில் உள்ள டிரெண்டில் உள்ள கார்கள் இ்நதியாவிலும் எதிர்பார்க்கப்படுவதால் இந்த அம்சம் காரில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சன்ரூஃப் வாகனத்திற்கான டிமா்ரட் அதிகமாகியுள்ள நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இப்படியான பிரிமியம் அம்சங்களை முடிந்தஅளவிற்கு அனைத்து வாகனங்களிலும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்த அம்சம் நிச்சயம் வாகனத்தின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள தொழிற்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வர பல தீவிரமான முயற்சிகளில் ஈடுபடுகிறது. முக்கியமாக இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவிற்கு பிரச்சனை இல்லாமல் எடுத்துவர தீவிர முயற்சிகளை செய்வதன் பலனாக இந்த வெற்றியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை சன்ரூஃப் உடன் உருவாக்கியுள்ளது. இது நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது., இந்த வாகனங்களில் உள்ள அம்சங்கள் நிச்சயம் வாகன விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









