நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்! மாருதி, டாடா சோலி முடின்ச்!
வழக்கமான ஐசி இன்ஜின் கார்கள் உடன் ஒப்பிடும்போது, ஹைப்ரிட் கார்கள் (Hybrid Cars) அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. எனவே முழுமையான எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவதை காட்டிலும், ஹைப்ரிட் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களும், புதிய ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளன. இதற்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

ஹூண்டாய் நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 8 புதிய ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய முதலீட்டாளர்கள் நாள் (India Investor Day) நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்தான், ஹூண்டாய் நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்திய சந்தையில் 8 புதிய ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களில், புதிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யவுள்ளது.

அத்துடன் முற்றிலும் புதிய ஹைப்ரிட் கார்களையும் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது. ஒட்டுமொத்தமாக வரும் 2030ம் ஆண்டிற்குள்ளாக, ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில், 8 ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களில் புதிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் 100 கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 99 கார்கள், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்க கூடியவையாக உள்ளன. ஆனால் வரும் 2030ம் ஆண்டிற்குள், ஹூண்டாய் நிறுவனம் புதிதாக 8 ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஹூண்டாய் நிறுவனத்தின் 100 கார்கள் விற்பனையாகி என்றால், அதில் 16 கார்கள், ஹைப்ரிட் இன்ஜின் கொண்டவையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் கார்கள் குறித்த அறிவிப்பு மட்டுமல்லாது, புதிதாக ஒரு எம்பிவி மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் வழங்க கூடியவை. எனவே ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய ஹைப்ரிட் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
பொதுவாகவே இந்திய சந்தையில், வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் வழங்கும் கார்களுக்கு, அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலமாக இந்திய கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








