8 பேர் போற காரை களமிறக்கும் ஹூண்டாய்! விலை இவ்ளோதானா! மாருதிக்கு இந்நேரம் பயத்துல காய்ச்சலே வந்திருக்கும்!
இந்தியாவில் எம்பிவி (MPV) மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-Road SUV) ரக கார்களுக்கு நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. எனவே இந்த 2 செக்மெண்ட்களிலும், புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீட்டாளர் நாள் (Investor Day), இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்தான், இந்திய சந்தையில் புத்தம் புதிய எம்பிவி மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாகவும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனத்தின் எம்பிவி மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் நமக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார்கள் தொடர்பாக ஒரு சில கணிப்புகள் உள்ளன.
இதன்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனத்திற்கு எம்பிவி செக்மெண்ட்டில் புதிதாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய எம்பிவி கார்களுக்கு போட்டியாக புதிதாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்தால், இந்தியாவில் தற்போது பிரபலமாக உள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) காரின் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், அதன் எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படலாம். அத்துடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளும், அப்படியே ஹூண்டாய் நிறுவனத்தின் எம்பிவி காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஹூண்டாய் மோட்டார் கம்பெனியின் ஒரு அங்கமாகதான் கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஹூண்டாய் நிறுவனம்தான், கியா நிறுவனத்திற்கு தாய் நிறுவனம் ஆகும். எனவே கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் வசதிகள் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்தால், அதன் புதிய எம்பிவி காரின் ஆரம்ப விலை 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எம்பிவி செக்மெண்ட்டில் புதிதாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹூண்டாய் நிறுவனத்திற்கு மற்றொரு ஆப்ஷனும் உள்ளது.
அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற கார்களுக்கு போட்டியாக மிகவும் பிரீமியமான ஒரு எம்பிவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டி என்றால், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி காரின் ஆரம்ப விலை 18 அல்லது 19 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார், 6 சீட்டர், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக காரானது, மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) போன்ற கார்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த 2 புதிய கார்களும் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் வரும் 2027 அல்லது 2028ம் ஆண்டுகளில், இந்த 2 புதிய கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








