டாடாவுக்கு சங்கு ஊத போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! மொத்த இந்தியாவையும் மிரள விட போறது உறுதி!
ஹூண்டாய் முதலீட்டாளர்கள் நாள் (Hyundai Investor Day) நிகழ்ச்சி, நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில், இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. வரும் 2030ம் ஆண்டிற்குள் ஹூண்டாய் நிறுவனம் 8 ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்யவிருப்பது இதில் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகும்.
இதுதவிர புதிய எம்பிவி ரக கார் ஒன்றையும், ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக கார் ஒன்றையும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றையும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

அது காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இதன் நீளம் 4 மீட்டருக்கு உள்ளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) காரின் நீளம் 4,340 மிமீ ஆக உள்ளது. அதாவது சுமாராக 4.3 மீட்டர்.
எனவே ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை விட, அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை விட இது மிகவும் விலை குறைவானதாகவும் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.02 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. இது ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 12 அல்லது 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டும்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் நீளம் மற்றும் விலை போன்ற அம்சங்களை எல்லாம் வைத்து பார்க்கையில், இது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு (Tata Nexon EV) நேரடி போட்டியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மட்டுமே, பத்திரிக்கை செய்தியின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் கூறியுள்ள நீளம் மற்றும் விலை போன்றவை எல்லாம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம். இதில், ஒன்று ஸ்டாண்டர்டு ரேஞ்ச் (Standard Range) ஆகவும், மற்றொன்று லாங் ரேஞ்ச் (Long Range) ஆகவும் இருக்கலாம்.
இதில், ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடல், நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் மாடல், நெடுஞ்சாலை பயணங்களுக்கு, அதாவது தொலை தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது விலை குறைவான காராக இருந்தாலும் கூட, டாப் வேரியண்ட்களில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏற்கனவே எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களின் வருகை, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரும், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் சவால் அளிக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








