அடி மாட்டு விலையில் களமிறங்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்! டாடாவை மொத்தமா முடிச்சு விட போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars), ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும்.
ஆனால் இவை இரண்டுமே சற்று விலை உயர்ந்த கார்களாக உள்ளன. தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 18.02 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.70 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 46.05 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
இவை இரண்டுமே விலை உயர்ந்த கார்களாக இருப்பதால், மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், 42 kWh மற்றும் 49 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 300 கிலோ மீட்டர்கள் மற்றும் 355 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.44 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஐரோப்பிய சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் இன்ஸ்டர் இவி (Hyundai Inster EV) எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில், இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட கூடிய ஒரு எலெக்ட்ரிக் காராக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார், வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள வென்யூ மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications