டிவிஎஸ்-ஹூண்டாய் கூட்டணியில் உருவாகப்போகும் புதிய 4வீலர்! ஆட்டோ வேற வரப்போகுதாம்!

2025-ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில், ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஆகியவை இந்திய மார்கெட்டிற்கான நவீன எலெக்ட்ரிக் 3 வீலர் மற்றும் மைக்ரோ 4வீலர் வாகனங்களை உருவாக்குவதில் கூட்டு முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன. இது ஹூண்டாய் தனது மைக்ரோ மொபிலிட்டி கான்செப்ட் இவி-களை காட்சிப்படுத்தியது.

இந்த கூட்டணி இந்தியாவின் திறமையான லாஸ்ட் மைல் கனெக்டெட் வாகனங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த கூட்டணி செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பயனர் நட்பு வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணியில் ஹூண்டாய் நிறுவனம் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் உள்ளிட்ட பரிவுகளில் பணியாற்றும். அதேசமயம் டிவிஎஸ் இந்தியாவில் உற்பத்தி மற்றும் விநியோக விஷயங்களை கையாளும். இந்த கூட்டணி ஹூண்டாயின் உலகளாவிய தொழிற்நுட்ப அறிவு மற்றும் டிவிஎஸ்ஸின் உள்ளூர் மார்கெட் பிரபலத்தை பயன்படுத்தி இந்த ரக வாகனங்களை விற்க முயற்சி நடக்கிறது

Hyundai Tvs E3X E4X

"ஹூண்டாய் ஒரு வாடிக்கையார்களை மையமாகக் கொண்ட பிராண்ட், இந்தியாவில் உள்ள மக்களை கவனித்துக்கொள்வது எங்கள் நோக்கம், இந்தியாவின் தனித்துவமான சூழலுக்கு ஏற்றவாறு மைக்ரோ-மொபிலிட்டி வாகனங்களை வடிவமைப்பது சிறந்தது," என்று ஹூண்டாய் மற்றும் ஜெனேசிஸ் குளோபல் வடிவமைப்புத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான சாங்யூப் லீ கூறினார்.

"டிவிஎஸ் மோட்டாருடன் இணைந்து, நாம் 3 வீலர் வாகனத்தை உள்ளூர் ரீதியாக உற்பத்தி செய்ய விரும்புகிறோம், அதே நேரத்தில்4 வீலர் வாகனத்திற்கான உலகளாவிய வாய்ப்புகளை ஆராய்வதும், உள்ளுணர்வு செயல்பாட்டை இந்தியாவின் புதுமை மனப்பான்மையுடன் இணைப்பது எங்கள் நோக்கம்." எனவும் தெரிவித்தார்.

Hyundai Tvs E3X E4X

ஹூண்டாயின் புதுமையான மைக்ரோ மொபிலிட்டி கான்செப்ட்ஸ் என்பது 'மனிதகுலத்திற்கான முன்னேற்றம்' என்ற அந்நிறுவனத்தின் கொள்கைக்கு சான்றாகும், இது சமூக இணைப்பு,சுலபமாக மொபிலிட்டி ஆகியவற்றை மேம்படுத்த முயற்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, எலெக்ட்ரிக் 3-வீலர் கான்செப்ட், சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்புடன் தற்போது பயன்பாட்டில் உள்ள மோட்டார் ரிக்கிஷாவை மாற்றியமைக்கும், இது லாஜிஸ்டிக்ஸ், அவசர சேவைகள் அல்லது பயணிகளை ஏற்றுவதற்கு ஏற்றது.

"ஹூண்டாயின் உலகளாவிய நிபுணத்துவத்தை டிவிஎஸ்ஸின் மொபிலிட்டி தீர்வுகள் குறித்த ஆழமான புரிதலுடன் இணைப்பதன் மூலம், புதுமையான மற்றும் நிலையான வடிவமைப்புகளின் மூலம் கடைசி மைல் போக்குவரத்தை மறுவரையறை செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் குழு யுத்தித் தலைவர் ஷரத் மிஸ்ரா கூறினார். இந்தியாவில் இயக்கத்திற்கான பாரம்பரிய அணுகுமுறையை மாற்ற, நிலைத்தன்மை மற்றும் புதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பரஸ்பர விருப்பத்தைக் காட்டுகிறது.

Hyundai Tvs E3X E4X

பரிந்துரைக்கப்பட்ட எலெக்ட்ரிக் 3 வீலர் வாகனம் சிறியதாகவும் மற்றும் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நெரிசலான நகர்ப்புற சூழல்கள் மற்றும் சவாலான உள்கட்டமைப்பு சூழ்நிலைகளில், குறுகிய தெருக்கள் மற்றும் பருவ மழைக் காலத்தில் வெள்ளம் தாக்கிய தெருக்கள் வழியாகச் செல்வதற்கு ஏற்றது. சாய்வான ஏர் பிளாக்கர், ஃபிளாட்டான ஃப்ளோர், நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ், அட்ஜெஸ்ட் செய்க்கூடிய பாடி உயரம், பெரிய டயர்கள் மற்றும் டோயிங் ஹூக் போன்ற அதன் வடிவமைப்பு அம்சங்கள், அதன் பல்துறைத்திறன் மற்றும் வலிமையை எடுத்துகாட்டுகிறது.

மேலும், ஹூண்டாய் மற்றும் டிவிஎஸ் ஆகியவை தங்கள் வாகனங்களை உலகளாவிய மார்கெட்டிற்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றன, அதிக பயன்பாடுகளுக்கான எலெக்ட்ரிக் 4வீலர் வாகனத்தின் கான்செப்டை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வு என்பது உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, அவர்களின் புதுமையான வாகனங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கான ஆசையையும் குறிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இடையேயான எதிர்பார்க்கப்படும் கூட்டணி, இந்தியாவின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முன்னோடி அணுகுமுறையை குறிக்கிறது. ஒருவருக்கொருவர் வலிமையைப் பயன்படுத்தி, இரண்டு நிறுவனங்களும் ஸ்டெபிலிட்டி, மாற்றக்கூடிய தன்மை மற்றும் பயனர்களுக்கான வசதியை உறுதியளிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த முயல்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 19:25 [IST]
English summary
Hyundai Motor Company and TVS Motor Company are partnering to develop electric three-wheelers and micro four-wheelers tailored for India's urban transport needs, focusing on sustainability and innovation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X