மைலேஜை திகட்ட திகட்ட தரும் எஞ்சின் தயார்.. ஹூண்டாயோட தயாரிப்பை பற்றி சொல்லவா வேண்டும்..

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய புதிய தலைமுறை மற்றும் வருங்கால கார்களுக்காக புதிய தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஞ்சினை தயார் செய்திருக்கின்றது. ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 2.5 லிட்டர் டர்போ (2.5l Turbo Hybrid) மோட்டாரையே அது தன்னுடைய கார்களுக்காக தயார் செய்திருக்கின்றது. இந்த மோட்டாரை வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பலிசேட் (Palisade) கார் மாடலில் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக காரா மாடலாக பலிசேட் உள்ளது. இந்த காரின் புதிய வெர்ஷனையே சமீபத்திலேயே ஹூண்டாய் நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தது. நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சியில் வைத்த இந்தே காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்தது.

Hyundai introduces new hybrid system in south korea

இந்த காரின் உற்பத்தி பணிகளே வெகுவிரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கும் புதிய எஞ்சினையும் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த புதிய 2.5 விட்டர் டர்போ மோட்டாருடன் சேர்த்து இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் (Electric Motor)-களையும் இந்த காரில் வழங்க இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இந்த இ-மோட்டாருக்காக சிறிய பேட்டரி பேக்கையும் ஹூண்டாய் வழங்க இருக்கின்றது. ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழே இந்த அம்சங்களை பலிசேட் காரில் ஹூண்டாய் வழங்குகின்றது. இவை அனைத்தும் சேர்ந்து ஆயிரம் கிமீ மைலேஜை தரக் கூடியதாக பலிசேட் காரை மாற்றியிருக்கின்றது. நிறுவனமும் இந்த தகவலை சமீபத்தில் நிகழ்ந்த புதிய பலிசேட் அறிமுக நிகழ்வின்போது கூறியிருந்தது.

Hyundai s next gen hybrid system pic

ஃப்யூவல் டேங்கில் முழுமையாக எரிபொருளை நிரப்பும்போதே இந்த அளவு அதிக மைலேஜைப் பெற முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த தகவல் அதிக மைலேஜ் விரும்பும் கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மோட்டார் அதிக மைலேஜை தரக் கூடியது மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதும் ஆகும்.

ஹைபிரிட் மற்றும் 2.5 லிட்டர் டர்போ மோட்டார் இரண்டும் சேர்ந்து 334 பிஎஸ் மற்றும் 460 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 19 சதவீத அதிக ஆற்றல் ஆகும். இதேபோல், புதிய வெர்ஷன் வழங்குவது 45 சதவீத அதிக மைலேஜ் ஆகும்.

Hyundai s next gen 2 5 l turbo hybrid engine

இந்த எஞ்சினைப் போலவே புதிதாக 1.6 லிட்டர் டர்போ ஹைபிரிட் (1.6 litre Turbo Hybrid) மோட்டாரையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இது இப்போது உள்ள மோட்டாரைக் காட்டிலும் 4 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் சீக்கிரமே பலிசேட் கார் மாடலின் உற்பத்தியை மிகப் பெரிய அளவில் தொடங்க இருக்கின்றது. இதை முன்னிட்டே சில தினங்களுக்கு முன்னர் அந்த காரையும், தற்போது அதில் பயன்படுத்தப்பட இருக்கும் அட்வான்ஸ்டு வசதிகள் நிறைந்த எஞ்சினையும் ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

இது கார் காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவரும் வகையில் அமைந்து இருக்கின்றது. ஆனால், தென்கொரிய சந்தைக்கான எஞ்சின் கூறப்படுகின்றது. உலக சந்தைகள் சிலவற்றிற்கும் இந்த எஞ்சின் உடன் பலிசேடை அது விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 13:00 [IST]
English summary
Hyundai unveils next generation hybrid powertrain system in south korea to enhance vehicle lineup
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X