டீசலில் 24 கி.மீ மைலேஜ் தரும் எஸ்யூவி காரா? வென்யூக்கு போட்டியா இத்தனை கார் இருக்குதா?

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது வென்யூ காரை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது.இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் நாம் டீசல் ஆப்ஷவனை பற்றி மட்டும் தான் இங்கே காணப்போகிறோம். இ்நத காரின் டீசல் ஆப்ஷனிற்கு போட்டியாக மார்கெட்டில் டாடா நெக்ஸான் மற்றும் கியா சைரோஸ் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இதில் எந்த கார் நல்ல மைலேஜ் தருகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் டீசல் கார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. டீசல் வாகனங்கள் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், மற்றும் அந்த கட்டுப்பாட்டிற்கு இணையான இன்ஜின்களை தயாரிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கைவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மார்கெட்டில் குறைவாக தான் உள்ளது. ஆனால் டீசல் கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருகு்கிறது.

Hyundai Venue Diesel Comparison

ஹூண்டாய் வென்யூ காரின் டீசல் இன்ஜின் விபரங்களை அந்நிறுவனம் வெளயிட்டுள்ளது.அதன்படி இன்ஜின் மைலேஜ், விலை உள்ளிட்ட விபரங்களை அதன் போட்டி தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பார்ப்போம். ஹூண்டாய் வென்யூ காரில் 1.5லி 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது116 பிெசு்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்னுஷன்களில் கிடைக்கிறது.

கியா நிறுவனம் சோனட் மற்றும் சைரோஸ் ஆகிய கார்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பழன்படுத்துகிறது. அந்த கார்களில் ஹூண்டாய் - கியா இடையே உள்ள ஒப்பந்தப்படி இன்ஜின் பகிரப்படுவதால் வென்யூ காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் இருக்கிறது. கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும் மாற்றங்கள் இல்லை.

Hyundai Venue Diesel Comparison

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின்வழங்கப்பட்டுள்ளது.இது 117 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனவ் உடன் வருகிறது. டாடா நெக்ஸான் காரிலும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் இருகு்கிறது. இது 115 எச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

அடுத்தாக மைலேஜை பொருத்தவரை ஹூண்டாய் வென்யூ காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்ட் 20.99 கி.மீ மைலேஜையும், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 17.9 கி.மை மைலேஜையும் வழங்குகிறது. கியா சோனட் காரில் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் வேரயின்ட் 18.6 கி.மீ மைலேஜை வழங்குகிறது. கியா சைரோஸ் கார் 6 ஸ்பீடு மேனுவல் கியரில் 20.75 கி.மீ மைலேஜையும், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வேரியன்டில் 17.65 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் கியர் வேரயின்டில் 20.6 கி.மீ மைலேஜூம், 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸில் 21.2 கி.மீ மைலேஜூம் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்டில் 23.23 கி.மீ மைலேஜூம், 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் வேரயின்டில் 24.06 கி.மீ மைலேஜூம் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை வரை ஹூண்டாய் வென்யூ மேனுவல் வேரியன்ட் கார் ரூ9.70 லட்சம் முதல் ரூ12.51 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆட்டோமெட்டிக் கியர் வேரயன்ட் கார் ரூ11.58 லட்சம் முதல் ரூ15.51 லட்சம் வரை கிடைக்கிறது. கியா சோனட் காரை பொருத்தவரை மேனுவல் வேரியன்டில் ரூ8.98 லட்சம் முதல் ரூ11.25 லட்சம் வரையிலான விலையிலும் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் கார் ரூ12.03 லட்சம் முதல் ரூ14 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.

கியா சைரோஸ் காரை பொருத்தவரை மேனுவல் கியர் வேரியன்ட் கார் ரூ10.14 லட்சம் முதல் ரூ12.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்ட் கார்கள் ரூ15.22லட்சம் முதல் ரூ15.94லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொருத்தவரை மேனுவல் வேரியன்ட் ரூ8.95 லட்சம் முதல் ரூ13.43 லட்சம் வரை விற்பனையாகிறது. இதுவே ஏஎம்டி வேரியன்ட் ரூ10.71 லட்சம் முதல் ரூ13.17 லட்சம் வரை விற்பனையாகிறது.

டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை மேனுவல் வேரியன்ட் ரூ10.00 லட்சம் முதல் ரூ14.90 லட்சம் வரை விற்பனையாகிவருகிறது. ஏஎம்டி வேரியன்டை பொருத்தவரை ரூ11.70 லட்சம் முதல் ரூ15.60 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் எல்லாம் கிட்டதட்ட ஒரே மாதிரியான விலையில் தான் விற்பனையாகிறது. மற்ற அம்ங்சங்களை வைத்த உங்களுக்கு தேவையான காரை தேர்வுசெய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஜினை பொருத்தவரை மஹிந்திராவின் 3எக்ஸ்ஓ கார் தான் அதிக டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. பவரை பொருத்தவரை பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. மைலேஜை பொருத்தவரை டாடா நெக்ஸான் கார் அதிகபட்சம் 24 கி.மைீ மைலேஜை வழங்குகிறது. இதில் உங்களுக்கு பெஸ்ட் என தேர்வு செய்து புக் செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 5, 2025, 15:30 [IST]
English summary
Hyundai venue diesel comparison rivals mileage analysis
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X