மாருதியை வெடவெடத்து போக வைத்த புதிய கார்! விலை இவ்ளோதானா! இந்திய மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போட போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த சூழலில், ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படவுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். அதே நேரத்தில் இந்த காரில் மொத்தம் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படவுள்ளன.

New Gen Hyundai Venue Interior

அவை 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் ஆகியவை ஆகும். வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் மிக முக்கியமான அம்சமாக இருக்கும்.

இதுதவிர தலா 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பகுதி இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் புதிய 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படவுள்ளன.

New Gen Hyundai Venue

மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கொண்டிருக்கும். எனவே புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என சொல்லலாம்.

டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், புதிய 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்இடி லைட்கள், புதிய க்ரில் அமைப்பு ஆகியவை எல்லாம், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நாளை அறிவிக்கப்பட்டு விடும். புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காருடன் சேர்த்து, புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ என் லைன் (Hyundai Venue N Line) காரும், நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ மற்றும் ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடல்களின் வருகை காரணமாக, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

அனேகமாக புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.90 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 3, 2025, 14:21 [IST]
English summary
Hyundai venue india launch tomorrow engine options features design expected price
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+