வெறும் ரூ25,000 குடுத்தா போதும்! இந்த காரை இப்பவே புக் பண்ணலாம்! என்ன வேரியன்ட் தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது வென்யூ என்-லைன் காரின் புதிய தலைமுறை காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்த காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. இதற்காக ரூ25,000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்ய முடியும். இந்த காரின் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட வென்யூ என்லைன் கார் 2 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. என்6 மற்றும் என்10 ஆகிய வேரியன்ட்கள் வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இந்த கார்8 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 5 கலர் மோனோடோன் கலர் ஆப்ஷனும், 3 கலர் டுயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

Hyundai Venue n line Varients

மேனோ டோன் கலர் ஆப்ஷனை பொருத்தவரை அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே, டிராகன் ரெட், அபயாஸ் பிளாக் மற்றும் ஹசல் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. டுயல் டோன் கலர் ஆப்ஷன்களை பொருத்தவரை அட்லஸ் ஒயிட், ஹசல் ப்ளூ, டிராக்ன் ரெட் ஆகிய கலர்களில் அபயாஸ் பிளாக் ரூஃப் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் செய்யப்பட்ட என்-லைன் கார் பல்வேறு அப்டேட் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் தனித்துவமான பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போக டார்க் குரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது போக வெளிப்பக்கம் சிவப்பு நிற ஆக்ஸன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் என் பிராண்டில் வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Venue n line Varients

இது போக ட்வின் எக்ஸாஸ்ட் டிப்ஸ்கள், சிவப்பு நிற பிரேக் கேலிபர்கள், என்லைன் ஸ்போர்ட்டி இன்டென்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இது போக கேபினில் கருப்பு மற்றும் சிவப்பு நிற தீம்கள் வழங்கப்பட்டுள்ளது. என் பிராண்ட் லெதர் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது மெட்டல் பெடல்கள், பீபோக் ஸ்டியரிங் வீல், ஆம்பியன்ஸ் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Venue n line Varients

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போடல் ஸ்விஃப்டர்கள், டிரைவ்மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், சிறப்பான டிரைவிங் அனுபவம் கிடைக்கிறது. இதுபோக இதில் ஸ்போர்ட்டியரானட்வின் எக்ஸாஸ்ட் அம்சங்கள் உள்ளன. இதனால் இந்த காரின் சத்தம் வித்தியாசமாக வழங்கப்ட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2025, 23:15 [IST]
English summary
Hyundai venue n line varients revealed bookings open rs 25000
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X