பழைய காரை விட விலை ஜாஸ்தியா இல்லையா? ஹூண்டாய் வென்யூல இவ்வளவு விஷயம் இருக்குதா?
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மற்றும் வென்யூ என்லைன் ஆகிய கார்களை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட காரின் 3 வேரியன்ட்களுக்கு மட்டுமே விலை வெளியிடப்பட்டுள்ளது. இதே நிலையில் பழைய காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களையும், புதிய காரின் விலை விபரங்களையும் நாம் இங்கே ஒப்பிடப்போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் இதுவரை தனது வென்யூ காரில் E, EX, S, மற்றும் SX ஆகிய பெயர்களில் தங்கள் கார்களின் வேரியன்ட்களை வைத்திருந்தது. தற்போது புதிய அப்டேட் வரும் போது இதை HX என மாற்றியுள்ளது. அப்படி என்றால் ஹூண்டாய் எக்ஸ்பிரியன்ஸ் என்று அர்த்தம், இதன்படி HX2, HX4, HX5, HX6, HX6T, HX8, மற்றும் HX10 ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் தற்போது விற்பனைக்கு வருகிறது. HX2, HX5, HX7, மற்றும் HX10 ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே டீசல் வெர்ஷன் கிடைக்கிறது. என்லைன் காரை பொருத்தவரை N6 மற்றும் N10 ஆெிய வேரியன்கள் உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் இன்று தனது வென்யூ காரின் HX2, HX4, HX5 ஆகிய வேரியன்ட்களுக்கான கார்களின் விலையை மட்டுமே அறிவித்துள்ளது. அதன்படி HX2 வேரியன்ட் ரூ7.89 லட்சம் என்ற விலையிலும், HX 4 வேரியன்ட் ரூ8.79 லட்சம் என்ற விலையிலும், HX 5 வேரியன்ட் ரூ9.14 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட்களில் 1.2லிட்டர் கப்பா எம்பிஐ பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்டின் விலை ஆகும். மற்ற வேரியன்ட்களில் விலை விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.
இந்த விலையை பழைய ஹூண்டாய் வென்யூ காரின் விலையுடன் ஒப்பிட வேண்டும் என்றால் பழைய வேரயின்ட்களான E, E Plus, S, S (O) ஆகிய வேரியன்ட்களுடன் ஒப்பிடலாம். E வேரியன்ட் ரூ7.29 லட்சம் என்ற விலையிலும், E Plus வேரியன்ட் ரூ7.64 லட்சம் என்ற விலையிலும், விற்பனையாகி வருகிறது. இது எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகள் தான். S மற்றும் S (O) வேரியன்ட்கள் முறையே ரூ10.13 லட்சம் மற்றும் ரூ10.90 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் விற்பனையாகி வந்தது.

இதை ஒப்பிட்டுபார்த்தால் பேஸ் வேரியன்டான E வேரியன்டும் தற்போது வந்துள்ள HX2 வேரியன்டும் ஒன்று தான். பழைய கார் ரூ7.29 லட்சமாக இருந்தது. தற்போது ரூ 7.90 லட்சமாக அதிகமாகியுள்ளது. இதே போல பழைய E Plus மற்றும் S வேரயின்டை தற்பேஆது உள்ள HX 4 வேரயின்டுடன் ஒப்பிடலாம். அந்த வாகனத்தின் விலையும் கணிசமாக அதிகமாகியுள்ளது. இறுதியாக பழைய S (O) வேரயின்டை தற்போது உள்ள HX 5 வேரயின்ட் உடன் ஒப்பிடும். இந்த வேரியன்டின் விலையும் அதிகமாகியுள்ளது.
இந்த ஒப்பீட்டை பார்க்கும் போது பழைய மாடலில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட மாடல் சற்று விலை அதிகமாக இருக்கிறது. புதிய அப்டேட்கள், புதிய அம்சங்கள், மற்றும் பிற விஷயங்கள் காரணமாக இந்த காரின் விலை அதிகரித்திருக்கலாம். ஆனால் பெரிய அளவில் விலைஅதிகம் இல்லை என்பதால் விற்பனையில் பெரிய பாதிப்பு எல்லாம் வரப்போவதில்லை.
இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. கடந்த மாதம் கூட இந்நிறுவனம் அதிகவிற்பவனையை பெற இந்த கார் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரை மக்கள் விரும்பி வாங்க இதில் உள்ள வசதிகள், இதன் வடிவமைப்பு, இன்ஜின் உள்ளிட்ட விஷயங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வென்யூ கார் பலரது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களம் இறங்கியுள்ளது. இந்த காரை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் விலை சற்று அதிகம் என்றாலும் அது விற்பனையை பாதிக்கும் அளவிற்கு இல்லாததால் மக்கள் பலர் இதை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








