6மாசத்துல 50,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 6 மாத விற்பனை விபரங்களை வெளியிறட்டுள்ளது.இதில் வழக்கம்போல கிரெட்டா கார் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில்இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 6 மாதத்தில் விற்பனை எவ்வளவு நடந்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தில் கிரெட்டா கார் தான் நீண்ட நாட்களாக விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த 6 மாத்திலும் அதே நிலைமை தான். இந்நிறுவனம் கடந்த 6 மாதத்தில் 2வது இத்தில் வென்யூ காரை வைத்துளு்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 11,484 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை அதிகமாகியுள்ளது.

Hyundai venue sales

கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 49978 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது மாதம் சராசரியாக 8329 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. கடந்த மாதம் நடந்த விற்பனை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான் முக்கியமான காரணம். இந்நிறுவனம் ஆரம்ப விலையாக ரூ7.94 லட்சம் என்ற விலையில் விற்வனையாகி வந்த காரை ரூ7.26 லடசத்திற்கு தற்போது விற்பவனையாகி வருகிறது. அதிகபட்சமாக இந்த காருக்கு ரூ1.32 லட்சம் வரை விலைகுறைந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரேகால் மேனுவல் இன்ஜி்ன ஆப்ஷன் இருக்கிறது. இந்த இன்ஜின் காரை 17.52 கி.மீ மைலேஜை வழங்குகிறது. அடுத்ததாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஐஎம்டி கியர் பாக்ஸில் 18,07 கி.மீ மைலஜூம், 1.0 லிட்டர் பெட்ரோல் டிசிடி கியர் பாக்ஸில் 18.31 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் மேனுவல் வேரியன்ட் ர%23.4 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

Hyundai venue sales

இந்த காரில் உள்ள மு்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன் ரூஃப்ல எல்இடி டிஆர்எல், எல்இடி புரோஜெக்டர் ஹைட்லைட், மற்றும் 8இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த காரில் பாதுகாப்பிற்காக பல்வேறு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் பின்பக்க கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த காரின் உள்ளே டிஜிட்டல் கிளஸ்டஸ் கலர் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட டிரைவிங் அனுபவம், எளிதாக தகவல்களை பெறக்கூடிய தகவலைமப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

Hyundai venue sales

இந்த கார் அதிக போட்டி மிகுந்த செக்மெண்டில் விற்பவனையாகி வருகிறது. இந்த காருக்கு போட்டியாக மார்கெட்டில் கியா நிறுவனத்தின் சோனட், மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா, ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ
ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனவையாகி வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இந்த கார் கடந்த 6 மாதங்களில் 50 ஆயிரம் பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். இதனால் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகுிறது என சொல்லலாம் தற்போது விலை குறைந்திருப்பரதால் அடுத்த 6 மாதத்தில் இதை விட விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2025, 12:55 [IST]
English summary
Hyundai venue sales second best selling car in 6 months
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X