1000 பேர் கூட இந்த காரை வாங்கல! ஒரு காலத்துல எப்படி வித்த கார் இது தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா காரின் விற்பனவையில் கடந்த ஜூலை மாதம் திடீரென மிகப்பெரிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த காரின் விற்பனை 4 இலக்கங்களில் இருந்து 3 இலக்கங்களாக குறைந்துள்ளது. இந்த வாகனம் மக்கள் மத்தியில் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்திருந்தாலும் இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் மிட்சைஸ் எஸ்யூவி காராக விற்பனவையாகி வருகிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் வெறும் 826 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1420 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 42 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த காரின் கடந்த 6 மாத கால விற்பனை விபரங்களை பார்க்கும்போது கடந்த பிப்ரவரி மாதம் 1207 கார்களும், மார்ச் மாதம் 1364 கார்களும், ஏப்ரல் மாதம் 1,005 கார்களும், மே மாதம் 930 கார்களும், ஜூன் மாதம் 813 கார்களும், ஜூலை மாதம் 826 கார்களும் விற்பனையாகியுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது கடந்த 3 மாதங்களாக இந்த காரின் விற்பனை 3 இலக்க எண்ணிக்கையில் குறைந்து்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருவது இந்த காரின் விற்பனவை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் எக்ஸ்டர் ஆகிய கார்கள் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் எஸ்யூவி கார்களை நோக்கி நகர்கின்றனர்.
இந்த ஹூண்டாய் வெர்னா கார் மார்கெட்டில் உள்ள ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக இடவசதி, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களுக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இந்த கார் எஸ்யூவி காரை ஒப்பிடும் போது இடவசதியிலும், கிரவுண்ட் கிளியரன்ஸிலும் இடம் குறைவு தான்.

ஹூண்டாய் வெர்னா காரை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பிரிமியமான உட்புற கட்டமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன.
இந்த காரில் உள்ள தொழிற்நுட்பங்கள் மற்றும் வாகனத்தின் ஃபெர்பார்மென்ஸ் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் இந்த காரின் விற்பனவை சரிவிற்கு முக்கியமான காரணம் மார்கெட் டிரெண்ட் தான். இந்நிலையில் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த மாத இறுதியில் விநாயகர் சதுர்த்தி, தொடர்ந்து ஓணம் பண்டிகை, நவராத்திரி, தீபாவளி, என வரிசையாக பண்டிகைகள் அணிவகுத்து வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் பொதுவாக விற்பனை அதிகரிக்கும் அதை குறி வைத்து ஹூண்டாய் நிறுவனம் சரிவு நிலையில் உள்ள இந்த காரின் விற்பனையை மீட்டு கொண்டு வர பல்வேறு திட்டங்களை போடும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் கார்களுக்கு தனி மவுசு இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இப்படியாக விற்காமல் திண்டாடும் கார்களுக்கு தள்ளுபடிகளை வாங்கி விற்பனை செய்ய வைப்பார்கள். ஆனால் இந்த காரின் விற்பனையை நீண்ட காலத்திற்கு அதிகரிப்பது சந்தேகமான விஷயம் தான். இந்த காரை விரும்பும் மக்கள் பலர் எஸ்யூவியை நோக்கி நேர்ந்துவிட்டனர். இந்த காரை ஹூண்டாய் ஒரு எஸ்யூவி ஸ்டைல் காராக மாற்றினால் விற்பனை அதிகமாகலாம்.


Click it and Unblock the Notifications









