78 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் மார்க்கெட் மொத்தமா மாறி போச்சு! எந்த நாட்டையும் இப்போ நம்பி இருக்க தேவை இல்ல!

இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை வருகிற 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு நம் இந்தியா பல துறைகளில் முன்னேற்றம் கண்டு, தற்போதைய உலகில் அதிக ஜிடிபி (GDP)-ஐ கொண்ட நாடுகளுள் ஒன்றாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு உடன் திகள்கிறது. இந்த வகையில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும் கடந்த 78 வருடங்களில் பல்வேறு விஷயங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ஐகானிக் (Iconic) கார் மற்றும் பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பிரீமியர் பத்மினி (Premier Padmini): இன்றைய கால இளம் தலைமுறையினர் நேரில் பார்க்க முடியாமல் போன இந்திய ஆட்டோமொபைல் துறையின் ராணி, பிரீமியர் பத்மினி ஆகும். வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த ஃபியட் 1100 (Fiat 1100) காரை அடிப்படையாக கொண்டு பத்மினி காரை உருவாக்கினர். 1950, 60 சமயங்களில் பிரபலமாக இருந்த பத்மினி கார்கள் குறிப்பாக பாலிவுட்டின் தாயகமான மும்பையில் அதிகளவில் கார் டாக்ஸிகளாக பயன்படுத்தப்பட்டன.

Iconic Cars And Bikes That Defined Indian Automobile

இந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador): பிரீமியர் பத்மினி கார் இந்திய ஆட்டோமொபைல் துறையின் ராணி என்றால், இந்துஸ்தான் அம்பாசடர் ராஜா என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு பல வருடங்களுக்கு இந்திய கார் மார்க்கெட்டை ஆட்சி செய்துவந்த காராக அம்பாசடர் விளங்குகிறது. சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருந்த அம்பாசடர் கார்களின் விற்பனையை கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்தான் நிறுத்தினர்.

Iconic Cars And Bikes That Defined Indian Automobile

ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet): ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் கூட புல்லட் பைக்கை பற்றி தெரிந்திருப்பர். அந்த அளவிற்கு, ஒரு காலத்தில் மோட்டார்சைக்கிளுக்கு மற்றொரு பெயர் 'புல்லட்' என்றே நம்மில் பலர் நினைத்திருந்தோம். 1950களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் புல்லட் பைக்குகளை இப்போதும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மாடர்னான தோற்றத்தில் விற்பனை செய்து வருகிறது.

Iconic Cars And Bikes That Defined Indian Automobile

மாருதி 800 (Maruti 800): இந்துஸ்தான் அம்பாசடரின் தொடர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய கார், மாருதி 800 ஆகும். இந்தியாவின் மாருதி நிறுவனத்திற்கும், ஜப்பானின் சுஸுகி (Suzuki) நிறுவனத்திற்கும் இடையே கூட்டணி ஏற்பட்ட பிறகு 1980 சமயத்தில் '800' கார் அறிமுகம் செய்யப்பட்டது. பணக்காரர்களால் மட்டுமே கார் வாங்க முடியும் என்கிற நிலைமையை மாற்றி, மிடில்-கிளாஸ் மக்களாலும் கார் கனவை நிஜமாக்க முடியும் என புரட்சி ஏற்படுத்திய கார், மாருதி 800 ஆகும்.

பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak): இத்தாலியில் பிரபலமாக இருந்த வெஸ்பா ஸ்பிரிண்ட் (Vespa Sprint) ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு, 1972இல் வெளிவந்த தரமான ஸ்கூட்டர், பஜாஜ் சேத்தக் ஆகும். இப்போதும் பஜாஜ் சேத்தக் பெயரை கேள்விப்படலாம். ஆனால், இப்போது இருப்பது சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும்.

Iconic Cars And Bikes That Defined Indian Automobile

டாடா இண்டிகா (Tata Indica): முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் கார், இண்டிகா ஆகும். அதாவது, 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முழுக்க முழுக்க மேட்-இன்-இந்தியா காரை உருவாக்க 41 வருடங்கள் (1998இல்) தேவைப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, இன்று இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறிமுகம் செய்த முதல் கார், இண்டிகா ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), மாருதி சுஸுகி ஜென் (Zen), யமஹா ஆர்.எக்ஸ்100 (Yamaha RX100) என இன்னும் பல கார் & பைக்குகள் உறுதுணையாக இருந்துள்ளன. 79வது சுதந்திர தினத்தை நினைவுக்கூறும் இந்தியாவின் ஆட்டோமொபைல் மார்க்கெட் எலக்ட்ரிக் வாகனங்கள் உடன் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துக் கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 12, 2025, 18:06 [IST]
English summary
Independence day special iconic cars and bikes that defined indian automobile era
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X