இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம டிமாண்ட்! 6 மாசத்துல இத்தனை லட்சம் கார் ஏற்றுமதியாகிடுச்சா?

இந்தியாவில் தயாரித்த வாகனங்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளுது. இந்த வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வானங்களை வெளிநாட்டு மக்கள் வாங்கி குவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி அதிகமாகியள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து இந்தியாவில் மட்டும் தான் விற்பனை செய்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட் வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதியாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நிதியாண்டில் முதல் அரையாண்டு காலத்தில் ஏற்றுமதி அதிக அளவில் உயர்த்துள்ளது.

India Automobile Export H126

கடந்த 6 மாதத்தில் மொத்தம் 31.4 லட்சம் வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளன. இந்த வளர்ச்சி குறிப்பிட்ட செக்மெண்டில் மட்டும் இல்லை. அனைத்து செக்மெண்டிலும் நல்ல வளர்ச்சி ஏற்றபட்டுள்ளது. 2 வீலர், 3வீலர், கார், கமர்ஷியல் வாகனங்கள் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் மொத்தம் 53.6 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 59 சதவீதம் ஏற்றுமதியை ஏற்றகனவே செய்துவிட்டது. இப்படியே போனால் இதுவரை அதிகபட்ச ஏற்றுமதியாக 2022ம் நிதியாண்டு ஏற்றுமதியை விட இந்த நிதியாண்டில் அதிக வாகனங்கள் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்பகுடுகிறது. இதனால் ஏற்றுமதி பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

India Automobile Export H126

டூவீலர் செக்மெண்டை பொருத்தவரை அதிக வாகனங்கள் இந்த செக்மெண்டில் ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டு மொத்த டூவீலர் செக்மெண்டில் 86 சதவீத ஏற்றுமதி பைக்குகளாக தான் உள்ளது. இதில் பஜாஜ் நிறுவனம் மொத்தம் 37 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. அதே நேரம் டிவிஎஸ் நிறுவனம் 35 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் 54 சதவீதம் அதிகமாகியுள்ளது.

பயணிகள் வாகனங்களை பொருத்தவரை மொத்தம் 4.45 லட்சம் பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. மாருதி நிறுவனம் இதில் பெரிய அளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துவிட்டது. மொத்த ஏற்றுமதியில் இந்நிறுவனம் மட்டும் 40 சதவீத ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் இவிட்டாரா காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த இடத்தில் ஹூண்டாய் நிறுவனமும் இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்றுமதியில் 17 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

India Automobile Export H126

3 வீலர்கள் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. 43 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் தான் இந்த செக்மெண்டில் சிறப்பான ஏற்றுமதியை செய்துள்ளது. மொத்தம் 2.19 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சிறப்பான விற்பனையைபெற்று வருகிறது.

கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை கடந்த 6 மாதத்தில் மொத்தம் 43,440 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இந்த செக்மெண்டில் 23 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இலகுரக கமர்ஷியல் வாகனங்கள் அதிக டிமாரண்டில் இருக்கிறது. அதே நேரம் மத்தி மற்றும் கனரக வாகன்ஙகள் சிறப்பான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களின் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்திய தயாரிப்புகளைமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 22, 2025, 17:50 [IST]
English summary
India automobile export h126 record vehicle exports apr sep 2025
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X