2 கார் வித்துச்சுன்னா அதுல 1 இது தான்! பெட்ரோல் விலை ஏறுனா இனி கவலையே இல்ல!
இந்தியாவில் கார்கள் விற்பனை தற்போது புதிய வடிவமைத்தை பெறஅற வருகிறது. இந்தியாவில் 2030ம் ஆண்டு விற்பனையாகும் கார்களில் 50 சதவீதம் மாசு இல்லாத வாகனங்களாக விற்பவனையாகும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக், ஹைபிரிட், சிஎன்ஜி வாகனங்களின் தயாரிப்பை அதிகப்படுத்ததிட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய மார்கெட்டில் தற்போது மாற்று எரிபொருள் வாகனங்கள் மிக குறைவாக தான் விற்பனையாகி வருகிறது. ஒட்டு மொத்த பயணிகள் வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் 3 சதவீதமும, ஹைபிரிட் வாகனங்கள் 2 சதவீதமும், சிஎன்ஜி வாகனங்கள் 19 சதவீதமும் விற்பனையாாியுள்ளது. தற்போது வரை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக வாகனங்களைவிற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் வரும் 2030ம் ஆண்டு இறுதிக்குள், 37சதவீதம் சிஎன்ஜி வாகனஙம், 25 சதவீதம் ஹைபிரிட் வாகனஙம், 15 சதவீதம் இவி வாகனங்களை விற்பனைசெய்ய திட்டமிட்டுள்ளது. இப்படி பார்த்தால் இதுவரை பெட்ரோல், டீசல் வாாகனங்கள் ஆதிக்கம் செலுத்தியது போல எதிர்காலத்தில் ஒரே வாகனம் தான் ஆதிக்கம் செலுத்தும் என சொல்ல முடியாது. கலவையான நிலையிலேயே விற்பனையாகும்.
இந்தியாவில் மாருதி நிறுவனம் 13 வாகனங்களை விற்பனவை செய்து வருகிறது. இதில் 3 காரில் ஒரு கார் சிஎன்ஜி காராகவே விற்பனையாகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தை பொருத்தவரை 2030 ஆண்டு மார்ச் மாத்திற்குள் 53 சதவீதம் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை விற்பனைசெய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 8 ஹைபிரிட் வாகனங்கள், 3 புதிய சிஎன்ஜி வாகனங்கள், 3 இவி வாகனங்களைகளம் இறக்க திட்டமிட்டுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் வரவுள்ள 26 வாகனங்களில் இது அடங்கும். இந்நிறுவனம் சிஎன்ஜி விற்பனை 22 சதவீதமாகவும், இவி விற்பனையை 14 சதவீதமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

டாடா நிறுவனம் இந்தியாவில் அதிக இவிகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இரக்கிறது. இந்நிறுவனம் 2030ம் ஆண்டு 30 சதவீதம் இவிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது போக சிஎன்ஜி வாகனங்களை 25 சதவீதம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 15 சதவீதம் சிஎன்ஜி வாகன்ஙகள் விற்பனையாகி வருகிறது.
மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்து துவங்கியுள்ளது. 2030ம் ஆண்டு 20-30 சதவீதம் வரை இவதி வாகனங்கள் விற்பனையாகும் எனவு கணித்துள்ளது. இதற்காக 2030க்குள் 7 எலெக்ட்ரிக் வாகன்ஙகளை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் 12 ஆயிரம் கோடியை முதலீடாக கொண்டு வந்து அடுத்த 3 ஆண்டுகளில் இவி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கார்பரேட் சராசரி மைலேஜ் விதிகளை அமலுக்கொண்டுவு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி தற்போது ஒரு கிலோ மீட்டர் பயணித்த 113 கிராம் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும், இதை முதல் ஆண்டு 88.4 கிராமாகவும் படிப்படியாக குறைத்து 71.5 கிராம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளுது. இதை மீறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதக்கப்படும் என கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல எலெக்ட்ரிக் வாகன விற்பனைசெய்தால் ஒரு வாகனம் 3 வாகனமாகவும், ஒரு பிளக் இன் அல்லது ஸ்டிராங் ஹைபிரிட் வாகனம் 2.5 வாகனமாகவும், ஃபிளக்ஸ் ஜப்யூயல் எத்தனால் வாகனம் 1.5 முதல் 2.5 வாகனமாகவும் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பவனையாகும் 2ல் ஒரு கார் இவி, ஹைபிரிட் அல்லது சிஎன்ஜி காராக விற்பனையாகும் என தெரிகிறது. இந்த மாற்றம் எப்படி நிகழப்போகிறது என்பதை பொருந்திருந்து பார்ப்போம். இப்படி நீங்கள் மாற்று எரிபொருள் வாகனத்தை வாங்க விரும்பினால் நீங்கள் எதை வாங்குவீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









