அமெரிக்கா, சீனாவை மண்டியிட வைக்க போகும் இந்தியா... வேட்டியை வரிந்து கட்டிய மத்திய அரசு!

உலகம் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி கொண்டுள்ளது. தற்போது கைவசம் உள்ள கச்சா எண்ணெய் (Crude Oil) வளம் அடுத்த 50 ஆண்டுகளில் தீர்ந்து போய் விடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகின் தற்போதைய கச்சா எண்ணெய் நுகர்வின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் வளத்தால் செல்வ செழிப்பில் மிதந்து கொண்டுள்ள நாடுகள் பலவும், சுற்றுலா (Tourism) உள்ளிட்ட துறைகளின் மூலமாக வருவாய் ஈட்ட ஆயத்தமாகி கொண்டுள்ளன. துபாயை (Dubai) உள்ளிடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) இதற்கு ஒரு உதாரணம்.

கச்சா எண்ணெய்தான், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய இன்றியமையாத எரிபொருட்களின் மூலப்பொருள். அதன் வளம் குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருட்களுக்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாகவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டுள்ளது.

Xi Jinping-Trump-Modi

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் தற்போதைய நிலையில் சீனா (China) மற்றும் அமெரிக்கா (US) போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. சீனாவின் பிஒய்டி (BYD) மற்றும் அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) போன்ற நிறுவனங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு சூளுரைத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்கரி (Nitin Gadkari) இது குறித்து தற்போது பேசியுள்ளார்.

BYD eMax 7

இது குறித்து அவர் கூறுகையில், ''எங்கள் அரசாங்கம் கடந்த 2014ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தபோது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து நான் பேசினேன். அப்போது அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தற்போது அது நிஜமாகியுள்ளது. அந்த சமயத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது 22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலமாக ஜப்பானை (Japan) பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து வரும் 2030ம் ஆண்டிற்குள், உலகின் நம்பர்-1 எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இந்தியாவை மாற்ற வேண்டும் என தற்போது இலக்கு நிர்ணயித்துள்ளோம்'' என்றார்.

அமைச்சர் நிதின் கட்கரி மாற்றத்தில் ஆர்வம் காட்ட கூடியவர். தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்க கூடியவர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக மாற்றியது உள்பட பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். எனவே அவர் தற்போது கூறியுள்ளபடி, வரும் 2030ம் ஆண்டிற்குள், உலகில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும் என நம்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அரசின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தெளிவாகவும், எளிமையாகவும் இருந்தால், இந்தியா நிச்சயம் வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகின் நம்பர்-1 எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக மாறும். இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு வரி உள்ளிட்ட விஷயங்களில் சலுகைகள் வழங்கப்படுவது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 18:14 [IST]
English summary
India set to become no 1 manufacturer of electric vehicles in the world by 2030 nitin gadkari
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+