ஃபோக்ஸ்வேகன் போலோ மாதிரியே இருக்கு.. ஆனா இது அது இல்ல.. கேமிராவின் கண்களில் சிக்கிய புதுமுக கார்..

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது. இருப்பினும், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்த கார் விற்பனையில் இருந்தபோது சட்டைகூட பண்ணாத இந்தியர்கள் சிலர் இப்போது இந்த விற்பனையில் இல்லாதபோது, இதன் மறு அறிமுகம் எப்போது அரங்கேறும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்திய ஆட்டோ துறை சார்ந்த செய்திகளும் இதையே கூறுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் போலோ-வின் ஸ்டைலில் ஓர் கார் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்படும் படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு ஃபோக்ஸ்வேகன் அதன் போலோ கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர போகின்றதோ என்கிற கேள்வியையே இந்த படங்கள் நம் மத்தியில் எழுப்பி இருக்கின்றன. ஆனால், இது ஃபோக்ஸ்வேகன் போலோ அல்ல. வேறொரு கார் மாடல் ஆகும்.

Volkswagen golf gti spied in india

Source: Zigwheels ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றுமொரு முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) மாடலே இதுவாகும். கோல்ஃப் கார் மாடலின் மிகுந்த ஸ்போர்ட்டி லுக் மற்றும் அம்சங்களைத் தாங்கிய ஓர் வெர்ஷனே கோல்ஃப் ஜிடிஐ ஆகும். இதையே இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக சமீப சில காலமாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்த தகவலையே உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஸ்பை படம் வெளியாகி இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தே நாட்டில் விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது. எடுத்த உடன் பிரமாண்ட எண்ணிக்கையில் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் யூனிட்டுகளாக அது இறக்குமதி செய்து விற்பனைச் செய்ய உள்ளது.

Volkswagen golf gti spy pic

அந்தவகையில், முதல் லாட்டில் சுமார் 250 யூனிட்டுகள் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடல் விற்பனைக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சில தினங்களிலேயே அது விற்று தீரலாம் என நாங்கள் நம்புகின்றோம்.

ஏனெனில் இந்தியர்களின் மனதை மயக்குகின்ற வகையிலான ஓர் ஸ்டைலையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ ஓர் ஹேட்ச்பேக் காராக இருந்தாலும், அது மிகவும் நீளமான உருவத்தைக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் வேறு எந்த ஹேட்ச்பேக் காரையும் இவ்வளவு நீளமாகப் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது.

சொல்லப்போனால் ஹூண்டாய் கிரெட்டாவைவிட இது நீளமாக இருக்குமாம். தொடர்ந்து, இந்த காரின் வெளிப்புறத்தை அழகானதாகக் காண்பிப்பதற்கான வேலைகளையும் ஃபோக்ஸ்வேகன் பார்த்திருக்கின்றது. அந்தவகையில், முன் பக்க டோரில், பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிக்கு கீழே ஜிடிஐ என்கிற பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், இந்த காரில் ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கப்படுவதைப் போன்ற கவர்ச்சிகரமான வீலை வழங்கி இருக்கின்றனர். இது கோல்ஃப் ஜிடிஐ காரின் பக்கவாட்டு பக்கத்திற்கு அதிக கவர்ச்சியான லுக்கை வழங்கும் விதமாக உள்ளது. இந்த காரின் பின் பக்கமும் அதிக அழகானதாகவே உள்ளது.

இதற்காக 3டி எல்இடி வகை ஹெட்லைட்டை இந்த காரில் பயன்படுத்தி இருக்கின்றனர். இத்துடன், ரூஃப்-இல் ஸ்பாய்ளர், அழகான எக்சாஸ்ட் துளை உள்ளிட்டவற்றையும் இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கின்றது. சிறப்பம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், இந்த காரின் உட்பக்கத்தில் 12.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட் ஜிபிடி வசதி மற்றும் வாய்ஸ் கமெண்ட் வசதி உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இந்த காரின் இயக்கம் மட்டுமல்ல பயணிப்பதும் மிகுந்த சுவாரஷ்யமாக இருக்கும் என தெரிகின்றது.

இதுமட்டுமல்ல ஜிடிஐ கார்களுக்கே உரித்தான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25 அங்குல அளவிலான டிரைவருக்கான திரை உள்ளிட்டவை இதில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த திரை வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதியை சப்போர்ட் செய்யும்.

இதுதவிர, சிவப்பு நிற இன்செர்ட்டுகள், ஹெட்ஸ் அப் திரை, மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பன்முக வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்ட ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவற்றையும் இந்த கோல்ஃப் ஜிடிஐ காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

மிக முக்கியமாக பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அடாஸ் (ADAS), பன்முக ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்களை இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் ஒற்றை ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என தெரிகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இது அதிகபட்சமாக 265 பிஎஸ் மற்றும் 370 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேவேளையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட இந்த காருக்கு வெறும் 5.9 செகண்டுகளே போதுமானது. இத்தகைய சிறப்பான வசதிகளைத் தாங்கிய கார் மாடலையே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Take a Poll

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரூ. 30 லட்சம் அல்லது அதற்கு அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் விலை பற்றிய துள்ளியமான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல், இதன் அறிமுக நாள் பற்றிய தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவிலேயே புதிய ஃபோக்ஸ்வகன் கோல்ஃப் ஜிடிஐ பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ இல்லாதது மிகப் பெரிய குறையாக உள்ளது. இந்த குறையை ஏதோ ஓர் வழியில் இந்த கார் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த காருக்கு அதிக ஆற்றலை உருவாக்கும் காரை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FAQs
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்?

இந்த கேள்விக்கான அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை. விரைவிலேயே அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், வரும் ஏதேனும் ஓர் பண்டிகை நாளில் இந்த காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

ரூ. 30 லட்சம் தொடங்கி ரூ. 40 லட்சம் வரையில் இந்த காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதால் இவ்வளவு அதிக விலையை அது கொண்டிருக்கும்.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்புகள் இருக்குதா?

இப்போதைக்கு இல்லை என்பதே எங்களின் பதில். நிறுவனத்தின் நிலைப்பாடும் அவ்வாறே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்கெட்டில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருந்தாலும், ஹேட்ச்பேக் வாகன பிரிவு மூழ்கும் கப்பலைப் போன்ற மாறியிருக்கின்றது. ஆகையால், ஃபோக்ஸ்வேகன் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்து ரிஸ்க் எடுக்காது என்றே நம்பப்படுகின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 11:59 [IST]
English summary
India spec volkswagen golf gti spied ahead of launch here is more details
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+