எமனுக்கே சவால் விடலாம்... ஏர்பேக் எல்லா பக்கத்தில் இருந்தும் வரும்! ரூ.35 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்கள்
இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் காரின் விலை மற்றும் மைலேஜை பார்க்கிறார்களோ இல்லையோ முக்கியமாக காரில் இடம்பெற்று இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பார்க்கின்றனர். இதனாலேயே, இன்றைய கால மாடர்ன் கார்களில் முடிந்தவரையில் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களையும் வழங்க கார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. குறைந்தப்பட்சம், அதிக எண்ணிக்கையிலான ஏர்பேக்குகளை வழங்க கார் கம்பெனிகள் விரும்புகின்றன. இதனால், சில கார்களில் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 7 வரை சென்றுள்ளது. அவ்வாறு, 7 ஏர்பேக்குகள் உடன் ரூ.35 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய கார்களை பற்றி தான் ஒன்றன்பின் ஒன்றாக இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
டாடா சஃபாரி (Tata Safari): டாடா சஃபாரி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களான அக்கம்ப்ளீஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் (Accomplished Plus)-இல் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.35 லட்சத்திற்கு உள்ளாக ரூ.23.85 லட்சம் மற்றும் ரூ.26.5 லட்சமாக தற்சமயம் உள்ளன.

டாடா கார்களுள் மிகவும் பாதுகாப்பான காராக பெயர் எடுத்தவைகளுள் சஃபாரியும் ஒன்றாகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என இரண்டிலும் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை சஃபாரி பெற்றுள்ளது. இதற்கேற்ப இந்த காரில் 360-டிகிரி கேமரா, லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்களை டாடா நிறுவனம் வழங்குகிறது.
டாடா ஹெரியர் (Tata Harrier): டாடா சஃபாரி காரின் 5-சீட் வெர்சனான ஹெரியரிலும் விலைமிக்க டாப் வேரியண்ட்டான ஃபியர்லெஸ்+ (Fearless+)-இல் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.24.35 லட்சத்தில் இருந்து ரூ.26.5 லட்சம் வரையில் உள்ளன. சஃபாரி மற்றும் ஹெரியர் என இரு டாடா கார்களிலும் விலை குறைவான வேரியண்ட்களில் 6 ஏர்ப்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700): மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காரான எக்ஸ்யூவி700-லும் டாப் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற இந்த மஹிந்திரா காரில் 360-டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அடாஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இவை இல்லாமல், எக்ஸ்யூவி700 காரில் 12-ஸ்பீக்கர் சோனி 3டி சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனோராமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா பி.இ 6 (Mahindra BE 6): மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் எலக்ட்ரிக் காரான இதன் விலைமிக்க பேக் 3 செலெக்ட் மற்றும் பேக் 3 வேரியண்ட்களில் பாதுகாப்புக்கு 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலமாக, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் முழு 5 நட்சத்திர ரேடிங்கை பெற்றுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e): மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு எலக்ட்ரிக் காரான எக்ஸ்.இ.வி 9இ -யிலும் பேக் 3 செலெக்ட் மற்றும் பேக் 3 வேரியண்ட்களில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரான இதன் 7 ஏர்பேக்குகளை பெறும் டாப் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.27.9 லட்சம்- ரூ.30.5 லட்சமாக உள்ளன.

அதேநேரம், 7 ஏர்பேக்குகளை பெறும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.5 லட்சத்தில் இருந்து ரூ.26.9 லட்சம் வரையில் உள்ளன. பிஇ 6 காரை போல பாரத் என்சிஏபி-இல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரிலும் லெவல்-2 அடாஸ், 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta): இன்னோவா ஆனது இந்திய அளவில் பிரபலமான டொயோட்டா எம்பிவி கார் ஆகும். இதன் விலைமிக்க வி.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் வேரியண்ட்களில் 7 ஏர்பேக்குகள் பொருத்தப்படுகின்றன. இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்காக வைகல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட மாடர்ன் வசதிகளையும் இன்றைய கால இன்னோவா கிரிஸ்ட்டா கார் பெறுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இன்னோவாவை போல், இந்தியாவில் பிரபலமான மற்றொரு டொயோட்டா கார் ஃபார்ச்சூனர் ஆகும். இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அந்த அளவிற்கு சற்று விலைமிக்க காராக விளங்கும் ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.35.37 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
இதற்கேற்ப, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில்-அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா, 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஜேபிஎல் நிறுவனத்தின் 11-ஸ்பீக்கர்களை கொண்ட பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வெண்டிலேட்டட் & பவர்டு முன் இருக்கைகள் உள்ளிட்டவை ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகின்றன.

பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3): பிரபலமான சீன எலக்ட்ரிக் காரான இது, நம் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த எலக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுவது இல்லை. சுப்பீரியர் என்கிற விலைமிக்க வேரியண்ட்டில் மட்டுமே 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.33 லட்சமாக உள்ளது.
இந்த சீன எலக்ட்ரிக் காரில் 12.8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜர், பனோராமிக் சன்ரூஃப், மல்டி-கலர்களில் கேபின் விளக்குகள், பிரீமியம் டைரக் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா மற்றும் அடாஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) எலக்ட்ரிக் காரிலும் ஏர் பேக்குகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு கார்களில் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்திய அரசாங்கத்தின் தொடர் உந்துதல் முக்கியமான காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications









