வாங்கிய ரெண்டே வருடத்தில் கையை வெச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியல! ஏசி கூட இருக்குதுன்னா பார்த்துக்கோங்க!

வாகனங்களில் எழுப்பப்பட்ட வீடுகளில் வசிப்போரை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக அதிகம் காண முடியும். அதாவது, அவர்களுக்கென வீடு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களது வாழ்க்கை ஒரே இடத்தில் இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய வாகனங்களில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்பவர்கள் கூட இருக்கின்றனர்.

ஆனால் பலர் இவ்வாறு வசிக்கும் அறைகள் உடன் உருவாக்கப்பட்ட வாகனங்களை எப்பயாவது பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கும் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருந்துவந்த நிலையில், சமீப காலமாக அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

tata yodha transformed into motorhome vehicle

அந்த வகையில், இந்தியாவில் ஒருவர் டொயோட்டா யோதா (Toyota Yodha) வாகனத்திற்கு மேல், ஒருவர் வசிப்பதற்கு தேவையான இருப்பிட வசதி உடன் வீட்டை கட்டி எழுப்பியுள்ளார். இது 2023ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட டொயோட்டா யோதா வாகனம் ஆகும். அதனை கடந்த 2 வருடத்தில் இவ்வாறு மாற்றியுள்ளனர். இந்த வாகனத்தில் முக்கியமான அம்சம், 4x4 டிரைவ் சிஸ்டம் உள்ளது.

இதன் மூலம், கரடு முரடான பாதைகள் கொண்ட பகுதிகளிலும் இந்த மாடிஃபை (Modify) செய்யப்பட்ட யோதா வாகனத்தை எடுத்துச் செல்லலாம். ஆதலால், சுற்றுலா பயணங்களுக்கும், புதுமையான அனுபவமாக காட்டுக்குள் சில நாட்கள் வசிப்பதற்கும் இந்த யோதா வாகனம் ஏற்றதாக உள்ளது. டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வாகனமான யோதாவின் பின்பக்க லோடு பகுதியில் இந்த வீடு செட்-அப் அமைக்கப்பட்டுள்ளது.

tata yodha transformed into motorhome vehicle

வாகனத்திற்கு பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கதவுகளின் வழியாக தான் வாகனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்குள் செல்ல முடியும். இந்த கதவுகள் வெளிநோக்கி திறக்கும் விதமாக இருப்பதால், வாகனத்திற்குள் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இந்த வீட்டிற்குள் சூரிய ஒளியில் தானாக இயங்கக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சமையலறைக்கு என தனியாக ஒரு அறை வீட்டிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளது. சமையலறைக்கான எரிவாயு சிலிண்டர் (Cylinder) பாதுகாப்பாக வாகனத்தின் எரிபொருள் டேங்கில் இருந்து தூரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, இந்த சிறிய வீட்டினுள் மின்விசிறி உடன் படுக்கை அறை, குளியலறை, மின்சாரத்திற்கு மினி ஜெனரேட்டர் (Generator), ஏசி (AC) என ஏகப்பட்டவை இடம்பெற்றுள்ளன.

tata yodha transformed into motorhome vehicle

இதற்கு தேவையான தண்ணீர் குழாய்கள் மற்றும் கேம்பிங் இருக்கை உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் உள்ளன. இந்த வாகனத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள வீட்டின் மேற்கூரையை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக 3 அடி வரையில் மேலே தூக்கிக் கொள்ள முடிகிறது. வீட்டினுள் மட்டுமின்றி, இந்த யோதா வாகனத்தில் எளிதில் வளையாத பம்பர், ஆஃப்டர்-மார்க்கெட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா யோதா ஆனது அருமையான வாகனம் ஆகும். பொருட்களை வைக்க பின்பக்கத்தில் இடவசதி உடன் உருவாக்கப்படுவது மட்டுமின்றி, இந்த வாகனத்தின் கேபினுக்கு உள்ளேயும் 5 பேர் வரையில் அமர முடியும். இந்த 5 பேர் இல்லாமல், இன்னும் சிலர் வாகனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள வீட்டினுள் அமர முடியும் என்பதால், இந்த யோதா வாகனம் குழுவாக ஜாலியாக பயணம் சென்றுவர ஏற்ற வாகனமாகும்.

Source: Cartoq

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 5:00 [IST]
English summary
Indian man transformed tata yodha into motorhome vehicle check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X