யாருப்பா இந்த காரின் ஓனரு... அமெரிக்காவில் கூட அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத கார்- எந்த கம்பெனியோடது தெரியுமா
ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang), உலகளவில் பிரபலமான, நிறைய பேரது கனவு கார். இருப்பினும், இந்தியாவில் இந்த விலையுயர்ந்த ஃபோர்டு காரை காண்பது கொஞ்சம் அரிதானதே. அப்படியிருக்கும் சூழலில், ஃபோர்டு மஸ்டங் காரின் டார்க் ஹார்ஸ் (Dark Horse) என்கிற ஸ்பெஷல் எடிசன் கார் இந்தியாவில் சாலை ஒன்றில் சென்றுள்ளது. இந்தியாவில் இந்த கார் வெளியே காட்சியளித்து இருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், மஸ்டங் டார்க் ஹார்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அமெரிக்காவை சேர்ந்த பழமையான கார் நிறுவனமான ஃபோர்டு நீண்ட வருடங்களாக உற்பத்தி செய்துவரும் கார், மஸ்டங் ஆகும். சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக மஸ்டங் கார்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த 50 வருடங்களில் மஸ்டங் காரின் தோற்றம் ஆனது பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது.

இருப்பினும், முதல்முறையாக உருவாக்கப்பட்ட மஸ்டங் காருக்கும், இப்போதைய மாடர்ன் மஸ்டங் காருக்கும் அவற்றின் வடிவத்தில் மட்டும் எப்போதும் ஒரு ஒற்றுமையை ஃபோர்டு நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. மஸ்டங் டார்க் ஹார்ஸ் என்பது அதன் பெயருக்கேற்ப சுற்றிலும் அதிகளவில் கருப்பு நிற பாகங்களை கொண்ட ஃபோர்டு மஸ்டங் கார் ஆகும்.
இந்த காரை அமெரிக்காவில் காண்பது கூட சற்று அரிதானது கூறப்படும் நிலையில், இந்தியாவில் ஒருவர் மஸ்டங் டார்க் ஹார்ஸ் காரை வாங்கி உள்ளார். மும்பையில் சாலை ஒன்றில் இந்த காரை ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஃபோர்டு மஸ்டங் டார்க் ஹார்ஸ் கார் விற்பனையில் இல்லை.

ஆகையால், வெளிநாட்டில் இருந்தே இந்த காரை அதன் ஓனர் இறக்குமதி செய்திருக்க வேண்டும். இதற்கு, வழக்கத்தை காட்டிலும் அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள். மும்பையில் காட்சி தந்துள்ள இந்த மஸ்டங் டார்க் ஹார்ஸ் காரில் நம்மை வசீகரிப்பது என்னவென்றால், அதன் ஸ்டேரிங் சக்கர பொசிஷன் ஆகும்.
ஏனெனில், இந்த காரில் இந்தியாவில் மற்ற கார்களில் இருப்பதை போன்று காரின் வலது பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் வலதுப்பக்க ஸ்டேரிங்கை கொண்ட நாடுகள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறைவான நாடுகளுள் ஃபோர்டு மஸ்டங் டார்க் ஹார்ஸ் கார் விற்பனை செய்யப்படும் நாட்டில் இருந்து இந்த காரை அதன் இந்திய ஓனர் வாங்கி உள்ளார்.
வீடியோவில், மஞ்சள்-சிவப்பு நிற நம்பர் பிளேட் காரில் பொருத்தப்பட்டுள்ளதை காணலாம். இவ்வாறான நம்பர் பிளேட் தற்காலிகமாக வழங்கப்படுபவை ஆகும். நம்பர் பிளேட்டில் உள்ள பதிவெண்ணை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், இந்த காரை கடந்த 2025 ஜனவரி மாதத்தில்தான் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு மஸ்டங் காரை நம் இந்திய சாலைகளில் காண்பதே அரிதானது எனும்போது, மஸ்டங் டார்க் ஹார்ஸ் எல்லாம் நம் நாட்டில் சாலையில் செல்லும் எவரொருவரையும் திரும்பி பார்க்க வைக்கக்கூடிய கார் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதற்குள் காரின் ஓனர் பணத்தை தண்ணி போல் செலவு செய்திருப்பார்.


Click it and Unblock the Notifications








