25கிமீ-க்கு மேல் மைலேஜ் தரும் காரை யாராவது வேண்டாம்னு சொல்வார்களா? அதுவும் குறைந்த விலையில் கிடைத்தால்...!!

சிஎன்ஜி கார்களுக்கு (CNG Cars) இந்தியாவில் மெல்ல மெல்ல தேவை அதிகரித்து வருகிறது. சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு என்பது மட்டுமின்றி, சிஎன்ஜி கார்களில் அதிக மைலேஜை பெற முடிகிறது. ஒரு காலத்தில் சிஎன்ஜி கார்களை மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப 3ஆம் தரப்பு நிறுவனம் மூலமாக மாற்றிக் கொண்டனர். ஆனால், தற்போது சிஎன்ஜி கார்களை கார் நிறுவனங்களே தங்களது தொழிற்சாலையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன. அவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிஎன்ஜி கார்களுள் விலை குறைவானவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா பஞ்ச் (Tata Punch): அளவில் சிறியதான கார் என்பது மட்டுமின்றி, இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார், டாடா பஞ்ச் ஆகும். பஞ்ச் காரின் அதிகப்படியான விற்பனைக்கு பஞ்ச் சிஎன்ஜி காரும் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஏனெனில், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சிஎன்ஜி கார், பஞ்ச் சிஎன்ஜி ஆகும். மற்ற சிஎன்ஜி கார்களில் இல்லாத அம்சமாக, 2-சிலிண்டர் டெக்னாலஜி உடன் டாடா சிஎன்ஜி கார்கள் உருவாக்கப்படுகின்றன.

most affordable suv cng cars

இதன் மூலமாக, காரின் பின்பக்கத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இந்த 2-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையிலேயே உருவாக்குகிறது. தலா 30 லிட்டர்கள் கொள்ளளவில் இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் பஞ்ச் சிஎன்ஜி காரின் பின்பக்கத்தில் வழங்கப்படுகின்றன. இதனை 60 லிட்டர்கள் கொள்ளளவில் ஒரே சிலிண்டராக வழங்கி இருந்தால், அளவில் சிறியதான காரில் நிறைய இடவசதி வீணாகி இருக்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்திய சந்தையில் ஹூண்டாயில் இருந்து விற்பனை செய்யப்படும் அளவிலான சிறியதான கார், எக்ஸ்டர் ஆகும். இந்த ஹூண்டாய் காரின் இ.எக்ஸ், எஸ் எக்ஸிக்யூட்டிவ், எஸ் ஸ்மார்ட், எஸ்+ எக்ஸிக்யூட்டிவ், எஸ்.எக்ஸ் ஸ்மார்ட், எஸ்.எக்ஸ் டெக் மற்றும் முற்றிலும் கருப்பு நிறத்திலான எஸ்.எக்ஸ் நைட் எடிசன் உள்ளிட்ட வேரியண்ட்கள் சிஎன்ஜி வெர்சன்களில் கிடைக்கின்றன.

most affordable suv cng cars

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.51 லட்சத்தில் இருந்து ரூ.9.53 லட்சம் வரையில் உள்ளன. ஹூண்டாய் நிறுவனம் அதன் சிஎன்ஜி கார்களை சிங்கிள்-சிலிண்டர் மற்றும் ட்யூயல்-சிலிண்டர் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது. மேற்கூறப்பட்ட எக்ஸ்டர் வேரியண்ட்கள் யாவும் ட்யூயல்-சிலிண்டர்கள் கிடைக்கின்றன. அதேநேரம், இதில் எஸ் எக்ஸிக்யூட்டிவ் மற்றும் எஸ்.எக்ஸ் வேரியண்ட்கள் மட்டும் சிங்கிள்-சிலிண்டர் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): ஃபிரான்க்ஸ் காரின் சிக்மா மற்றும் டெல்டா என்கிற இரு வேரியண்ட்கள் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் டெல்டா ஆனது விலைமிக்க டாப் வேரியண்ட் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.49 லட்சம் மற்றும் ரூ.9.35 லட்சமாக உள்ளன.

most affordable suv cng cars

இந்த சிஎன்ஜி காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 77.5 எச்பி மற்றும் 98.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 55-லிட்டர் சிஎன்ஜி டேங்க் உடன் உருவாக்கப்படும் ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி காரின் மைலேஜ் 28.51km/kg ஆகும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor): இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யூவி கார், டொயோட்டா டைசர் ஆகும். மேலே கண்ட ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டாவின் இந்த லேட்டஸ்ட் கார் நேரடியாகவே சிஎன்ஜி வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி கார் போல் இல்லாமல், டைசர் சிஎன்ஜி கார் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

most affordable suv cng cars

டைசர் காரின் விலை குறைவான இ வேரியண்ட் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. டைசர் இ சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.8.72 லட்சமாக உள்ளது. ஃபிரான்க்ஸில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் டைசர் சிஎன்ஜி காரிலும் வழங்கப்படுகிறது. மேலும், டைசர் சிஎன்ஜி காரிலும் மைலேஜை அதே 28.51km/kg வரையில் பெறலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 4 விதமான வெர்சன்களிலும் நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் முதல்முறையாக சிஎன்ஜி வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார், டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஆகும். பஞ்ச் சிஎன்ஜி காரை போன்று, நெக்ஸான் சிஎன்ஜி காரும் டாடாவின் 2-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜி உடன் உருவாக்கப்படுகிறது.

most affordable suv cng cars

மேலும், பஞ்ச் சிஎன்ஜி காரை போல நெக்ஸான் சிஎன்ஜி காரிலும் தலா 30 லிட்டர்கள் கொள்ளளவில் இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் பின்பக்கத்தில் வழங்கப்படுகின்றன. நெக்ஸான் காரின் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ எஸ், பியூர்+, பியூர்+ எஸ், கிரியேட்டீவ் மற்றும் கிரியேட்டீவ்+ எஸ் உள்ளிட்ட வேரியண்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): ரூ.9.64 லட்சத்தில் இருந்து ரூ.12.21 லட்சம் வரையில் விலை கொண்டதாக விளங்கும் பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் ஆனது பிரெஸ்ஸாவின் எல்.எக்ஸ்.ஐ (LXI), வி.எக்ஸ்.ஐ (VXI) மற்றும் இசட்.எக்ஸ்.ஐ (ZXI) வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

most affordable suv cng cars

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரிலும் வழங்கப்படுகிறது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் 55 லிட்டர் கொள்ளளவில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்படுகிறது. பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் மைலேஜ் 25.51km/kg என ARAI சான்றளிக்கப்பட்டு உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder): மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் தான், அர்பன் க்ரூஸர் ஆகும். ஆனால், கிராண்ட் விட்டாராவை காட்டிலும் குறைந்த விலையிலேயே சிஎன்ஜி வெர்சனில் கிடைக்கிறது. அர்பன் க்ரூஸர் காரின் மத்திய வேரியண்ட்களான இ மற்றும் ஜி ஆகியவை சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றன.

most affordable suv cng cars

ஹைரைடர் சிஎன்ஜி காரில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 88 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி வாயுவில் அதிகப்பட்சமாக 26.6கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என டொயோட்டா தெரிவிக்கிறது. கிராண்ட் விட்டாராவுக்கு அடுத்து, இந்தியாவில் சிஎன்ஜி வெர்சனில் விற்பனை செய்யப்படும் 2வது மிட்-சைஸ் எஸ்யூவி கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்கள் குறிப்பாக டாக்ஸி உள்ளிட்ட மைலேஜ் சார்ந்த தொழில்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. டாக்ஸி தொழிலுக்கு பெரும்பாலும் விலை குறைவான கார்களையே பயன்படுத்துவதால், கார் நிறுவனங்களும் தங்களது குறைந்த விலையிலான கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டுவர முயற்சிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 14, 2025, 22:56 [IST]
English summary
Indias most affordable suv cng cars from tata punch cng to toyota hyryder cng
மேலும்... #cng car #cheap cars #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X