5 இருக்கை மட்டுமே இருந்தாலும் மக்கள் விடுவதாக இல்லை... மாருதி, டாடா கார்களை நிறைய பேர் கண்டுக்குறதே இல்ல!!

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்கவே சமீப காலமாக மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் சரி, மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையும் சரி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, 4.2 மீட்டரில் இருந்து 4.4 மீட்டர் வரையில் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்களுக்கு சிறப்பான மார்க்கெட் இந்தியாவில் உள்ளது. இதனை காட்டிலும் அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார்களாக விளங்குகின்றன.

india s compact suv cars

இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 14 விதமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2025 மார்ச் மாதத்தில் 51 ஆயிரத்து 416 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 மார்ச்சில் 50 ஆயிரத்து 41 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 1,375 யூனிட்கள், அதாவது 2.75% அதிகரித்துள்ளது. வழக்கம்போல், கடந்த மார்ச் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கிரெட்டா கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

india s compact suv cars

எஸ்யூவி கார்கள் என்று மட்டுமின்றி, ஒட்டுமொத்தத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு, கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 59 கிரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. அதுவே 2024 மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 458 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில், கிரெட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை 1,601 யூனிட்கள் (9.73%) அதிகரித்துள்ளது. இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்குவோரில் 3இல் ஒருவர் நிச்சயமாக ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவின் தவிர்க்க முடியாத காராக மாறிவரும் கிரெட்டாவின் விற்பனை கடந்த சில மாதங்களில் வெகுவாக அதிகரித்து இருப்பதற்கு கிரெட்டா எலக்ட்ரிக் கார் முக்கியமான காரணம் ஆகும்.

india s compact suv cars

கிரெட்டாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) 10 ஆயிரத்து 418 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. முதலிடத்தில் உள்ள கிரெட்டாவுக்கும், 2வது இடத்தில் உள்ள கிராண்ட் விட்டாராவுக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் சுமார் 7,641 யூனிட்கள் வித்தியாசம் உள்ளது.

அதாவது, அந்த அளவுக்கு விற்பனையில் கிரெட்டா முன்னிலை வகிக்கிறது. 2வது இடத்தில் 10,418 யூனிட்கள் விற்பனை உடன் உள்ள கிராண்ட் விட்டாரா 2024 மார்ச்சில் சற்று அதிகமாக 11,232 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதாவது, கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 814 கிராண்ட் விட்டாரா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025 பிப்ரவரி மாதத்திலும் இதனை காட்டிலும் 251 கார்கள் அதிகமாக 10 ஆயிரத்து 669 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கிரெட்டா, கிராண்ட் விட்டாராவுக்கு அடுத்து 3வது இடத்தில் கியா செல்டோஸ் (Kia Seltos) உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 6,525 ஆகும். 2வது இடத்தில் உள்ள கிராண்ட் விட்டாராவை காட்டிலும் ஏறக்குறைய 3,900 செல்டோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில், இது கியா செல்டோஸின் வழக்கமான விற்பனை எண்ணிக்கையே ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான செல்டோஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 7,912 செல்டோஸ் கார்களை கியா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், 2024 மார்ச்சை காட்டிலும் 2025 மார்ச்சில் 1,387 செல்டோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) 5,286 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் இதனை காட்டிலும் 679 ஹைரைடர் கார்கள் அதிகமாக 5,965 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெறும் 4,314 ஹைரைடர் கார்களை மட்டுமே டொயோட்டா இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது.

இந்த வரிசையில் 5வது இடத்தில் டாடா கர்வ் (Tata Curvv) 3,785 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. டாடா மோட்டார்ஸின் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காரான கர்வ் 2024 மார்ச் மாத சமயத்தில் மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,483 டாடா கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், பிப்ரவரியை காட்டிலும் மார்ச் மாதத்தில் 302 கர்வ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

6வது இடத்தில் ஹோண்டா எலிவேட் (Honda Elevate) காரும், 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரும் முறையே 2,475 மற்றும் 1,590 யூனிட் விற்பனை எண்ணிக்கைகள் உடன் உள்ளன. இதில் டைகுன் காரின் விற்பனையில் பெரிய அளவிற்கு மாற்றமில்லை என்றாலும், ஹோண்டா எலிவேட் காரின் விற்பனை எண்ணிக்கை 2024 மார்ச்சில் 3,277 ஆக பதிவாகி இருந்தது.

8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), எம்ஜி இசட்.எஸ் இவி (MG ZS EV) கார்கள் உள்ளன. இதில் இரு எலக்ட்ரிக் கார்கள் அடங்குகின்றன. இவற்றின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 934, 897 மற்றும் 856 என கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமில்லாமல், இன்னும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார், எம்ஜி அஸ்டர், சிட்ரோன் பசால்ட் மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை 250ஐ கூட தொடவில்லை. இதில் இருந்து, முதலிடத்தில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா எந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கைக்குரிய காராக உள்ளது என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 23:45 [IST]
English summary
Indias most selling compact suv cars of march 2025
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X