டாடாவின் கதையை சைலண்ட்டா முடித்து வரும் மாருதி கார்! எத்தனை கார்கள் வந்தாலும் இதுக்கு கஸ்டமர்ஸ் தேடி வராங்க!

இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே எஸ்யூவி (SUV) கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தாழ்வான செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனாலேயே கார் நிறுவனங்கள் புது புது எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய விரும்புக்கின்றன. எஸ்யூவி கார்கள் பல விதமான வகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார்கள் ஆகும். 3.8 மீட்டரில் இருந்து 4 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள், சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும்.

இதனை காட்டிலும் சிறிய அளவிலான மைக்ரோ-எஸ்யூவி கார்களும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், அவற்றின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் பெரியதாக யாரும் அவற்றை கண்டுக் கொள்வது இல்லை. இதனாலேயே, சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

sub-compact suv cars sales

மேலும், சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் குறைந்தது ஒரு மாடலை ஆவது கொண்டுள்ளன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற முன்னணி கார் நிறுவனம் ஒன்றுக்கு இரண்டு சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்கின்றன.

இவை இல்லாமல், கியா (Kia), ஸ்கோடா (Skoda) போன்ற கார் நிறுவனங்களும் கடந்த 1 வருடத்தில் புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளதால், இந்தியாவில் இந்த வகை எஸ்யூவி கார்களின் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 845 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

sub-compact suv cars sales

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 94 ஆயிரத்து 225 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை 9.15%, அதாவது 8,620 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் 9 ஆயிரத்து 869 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 714 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக முதலிடத்தை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Brezza) பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 971 ஆகும். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்து இருப்பினும், 2024 ஏப்ரலில் இதனை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 142 பிரெஸ்ஸா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2024 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 113 ஆகும். ஆனால், கடந்த 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரலில் 425 பிரெஸ்ஸா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 546 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 425 கார்கள் குறைவு என்பது பெரிய எண்ணிக்கை கிடையாது. ஆக, கடந்த பல மாதங்களாகவே பிரெஸ்ஸா கார்கள் விற்பனை சீராக உள்ளது.

sub-compact suv cars sales

பிரெஸ்ஸாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார், டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 457 ஆகும். அதுவே, 2024 ஏப்ரலில் வெறும் 11 ஆயிரத்து 168 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரலில் 4,289 நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2025 மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 366 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 909 நெக்ஸான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx) 14 ஆயிரத்து 345 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 ஏப்ரலிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஃபிரான்க்ஸ் கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த 2025 மார்ச் மாதத்தில் 13 ஆயிரத்து 669 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 676 ஃபிரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 4வது இடத்தில் டாடா பஞ்ச் உள்ளது. ஆனால், பஞ்ச் 4வது இடத்திற்கு சறுக்கி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் சுமார் 19 ஆயிரத்து 158 யூனிட்கள் விற்பனை உடன் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் டாடா பஞ்ச் இருந்தது.

sub-compact suv cars sales

கடந்த 2025 மார்ச் மாதத்திலும் 17 ஆயிரத்து 714 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பஞ்ச் காருக்கு அடுத்து இந்த வரிசையில் 5வது மற்றும் 6வது இடங்களில் கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 8,068 மற்றும் 7,953 ஆகும். இவற்றிற்கு அடுத்து 7வது இடத்தில் 7,568 யூனிட்கள் விற்பனை உடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ உள்ளது.

8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஹூண்டாய் எக்ஸ்டர் (5,416), ஸ்கோடா கைலாக் (5,364) மற்றும் கியா சிரோஸ் (4,000) உள்ளன. சரியாக 4 ஆயிரம் கியா சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதற்கு காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் சரியாக 4,000 சிரோஸ் கார்கள் மட்டுமே கியா தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் மாதங்களில் சிரோஸ் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவை இல்லாமல், டொயோட்டா டைசர், நிஸான் மேனைட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவை 2,500க்கும் குறைவான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இந்த லிஸ்ட்டில் இடம்பெறவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 21, 2025, 23:52 [IST]
English summary
Indias most selling sub compact suv cars 2025 april sales report
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X