லிட்டருக்கு 17km மைலேஜ் தரும் இந்த மாருதி காரில் அப்படி என்ன இருக்கு? ஷோரூமுக்கு வரவங்க எல்லாரையும் இழுக்குது!
இந்தியாவில் நாளுக்கு நாள் எஸ்யூவி (SUV) கார்களுக்கான மார்க்கெட் விரிவடைந்துக் கொண்டே வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு தற்போதெல்லாம் சாலையில் எஸ்யூவி கார்களாக தான் தென்படுகின்றன. அந்த அளவிற்கு நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு நம்மில் நிறைய பேர் மிகவும் விரும்புகிறோம். இதனாலேயே எஸ்யூவி கார்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 மே மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைப்பதினாலேயே சமீப காலங்களில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக புது புது எஸ்யூவி கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகின்றன. இதனால், மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் எஸ்யூவி கார் மாடல்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இத்தகைய போட்டிக்கு மத்தியில், இந்தியாவில் கடந்த மே மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரெஸ்ஸா (Brezza) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 566 ஆகும்.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் 14 ஆயிரத்து 186 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, பிரெஸ்ஸா கார்கள் விற்பனை ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் 10% அதிகரித்துள்ளது. பிரெஸ்ஸாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் இந்தியாவின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளது.

2024 மே மாதத்தில் 14 ஆயிரத்து 662 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 198 கார்கள் அதிகமாக 14 ஆயிரத்து 860 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கடந்த மாதத்தில் 14 ஆயிரத்து 401 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2024 மே மாதத்தில் 13 ஆயிரத்து 717 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல், 2024 மே மாதத்தில் 12 ஆயிரத்து 681 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் இந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 13 ஆயிரத்து 584 யூனிட்கள் விற்பனை உடன் 4வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் இரு டாடா (Tata) எஸ்யூவி கார்கள் உள்ளன. இதில், 5வது இடத்தில் உள்ள பஞ்ச் கார் ஆனது கடந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 18 ஆயிரத்து 949 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, எஸ்யூவி கார்கள் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கார்களிலேயே அந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 133 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் உள்ள டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் 13 ஆயிரத்து 96 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2024 மே மாதத்தில் 11 ஆயிரத்து 457 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 4 இடங்களில் மஹிந்திரா தார் (10,389), கியா சொனெட் (8,054), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (7,952) மற்றும் டொயோட்டா ஹைரைடர் (7,573) உள்ளன. இந்த 10 கார்களில் பெரிதும் விற்பனை சரிவை கண்டிருப்பது எதுவென்று பார்த்தால், டாடா மோட்டார்ஸின் பஞ்ச் ஆகும். பஞ்ச் கார்களின் விற்பனை சரிவு தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சறுக்கலுக்கும் காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









