5-ஸ்டார் ரேட்டிங் காரை உருவாக்கியது டாடாவுக்கு கை மேல் பலன்! மாருதி கார்களுக்கு தண்ணி காட்டுது!

கடந்த 2025 நவம்பர் மாதத்தில், இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தை சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த ஆண்டை விட 21% அதிகரித்து, 1 லட்சத்து 44,368 யூனிட்டுகளில் இருந்து 1 லட்சத்து 74,783 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹுண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பல கார் மாடல்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளன. டாடா நெக்ஸான் (நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் உள்பட) இம்முறை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

india s most selling top-10 cars

கடந்த மாதத்தில் 22,434 நெக்ஸான் (Nexon) கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரின் 15,329 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில், இது 46.35% வலுவான அதிகரிப்பு ஆகும். பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலையான தேவை ஆகியவை நெக்ஸானை போட்டிக்கு அப்பாற்பட்டு இந்த வரிசையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளது.

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில், மாருதி சுஸுகி டிசையர் (Dzire) 21,082 யூனிட்டுகளுடன் அசரவைக்கும் விற்பனையை பதிவு செய்துள்ளது. நகர்ப்புற மற்றும் டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்கான அதிகமான தேவையால், டிசையர் கடந்த மாதத்தில் 78.98% என்கிற பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift) 19,733 யூனிட்டுகளை விற்று, 2024 நவம்பரை காட்டிலும் 33.90% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

india s most selling top-10 cars

இதனைத் தொடர்ந்து, டாடா பன்ச் (பன்ச் இவி உட்பட) 18,753 யூனிட்டுகளுடன் 21.50% வளர்ச்சியை அடைந்து, மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார்கள் பிரிவில் டாடா தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஐந்தாவது இடத்தில், ஹுண்டாய் கிரெட்டா (கிரெட்டா இவி உட்பட) 17,344 யூனிட்டுகளை பதிவு செய்து, 12.24% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் இதன் அடுத்த தலைமுறை அப்கிரேட் மாற்றத்திற்கு முன்னதாக இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga) ஆனது எம்பிவி (MPV) கார்கள் பிரிவில் 16,197 யூனிட்டுகளுடன் நிலையான விற்பனை தேவையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது; இது கடந்த ஆண்டு நவம்பரை விட 6.91% அதிகரிப்பு ஆகும்.

ஏழாவது இடத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ (ஸ்கார்பியோ என் உட்பட) 15,616 யூனிட்டுகளுடன் தனது வலுவான ஏற்றத்தை கடந்த நவம்பரிலும் தொடர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் அதிக தேவையை சமாளிக்க உற்பத்தியை அதிகரித்ததால், எர்டிகா 22.92% வளர்ச்சியை விற்பனையில் அடைந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் க்ராஸ்ஓவர் காரான ஃபிரான்க்ஸ் (Fronx) 15,058 யூனிட்டுகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 நவம்பரை விட சற்று 1.18% வளர்ச்சி ஆகும்.

No Top 10 Cars Nov-25 Nov-24 Diff Growth % YoY % Share Nov 25
1 Nexon / EV 22,434 15,329 7,105 46.35 12.84
2 Dzire 21,082 11,779 9,303 78.98 12.06
3 Swift 19,733 14,737 4,996 33.90 11.29
4 Punch / EV 18,753 15,435 3,318 21.50 10.73
5 Creta / EV 17,344 15,452 1,892 12.24 9.92
6 Ertiga 16,197 15,150 1,047 6.91 9.27
7 Scorpio / N 15,616 12,704 2,912 22.92 8.93
8 Fronx 15,058 14,882 176 1.18 8.62
9 Wagon R 14,619 13,982 637 4.56 8.36
10 Brezza 13,947 14,918 -971 -6.51 7.98
- Total 1,74,783 1,44,368 30,415 21.07 100.00

மார்க்கெட்டில் எப்போதும் பிரபலமான வேகன்-ஆர் (Wagon R) 14,619 யூனிட்டுகளுடன், 2024 நவம்பரை விட 4.56% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த முதல் 10 கார்கள் பட்டியலில் சரிவைக் கண்ட ஒரே கார், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Brezza) ஆகும். இது கடந்த மாதத்தில் 13,947 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு 6.51% சரிவுடன் பத்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு நவம்பரில் 14,918 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி கார்கள் இந்தியாவில் எப்போது அதிகம் விற்பனையாகக் கூடியவையே. ஆனால், டாடா நெக்ஸான் மற்றும் பன்ச் கார்களின் விற்பனை சமீப மாதங்களில் வெகுவாக அதிகரித்து இருப்பது, டாடா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், கிரெட்டாவை தவிர்த்து மற்ற கார்கள் எதுவும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பிடிக்காதது ஹூண்டாய் நிறுவனத்திற்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 10, 2025, 21:14 [IST]
English summary
Indias most selling top 10 cars of november 2025 tata nexon maruti suzuki dzire and swift
மேலும்... #car sales #tata nexon #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+