19கிமீ மைலேஜ் தரக்கூடிய ஹூண்டாய் கார் மீதுதான் எல்லாரது கண்ணும்! மாருதி, டாடா கார்கள் இதுக்கு அப்புறம்தான்!

உலகில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு இந்தியாவில் கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், புது, புது கார் மாடல்கள் தொடர்ச்சியாக மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட சில கார்கள் தான் எப்போதும் மக்களின் மிகுந்த விருப்பத்திற்கு உரியவைகளாக உள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) எவ்வாறு முதலிடத்தை பிடிக்கிறது என்பதை இந்த டாப்-10 லிஸ்ட்டை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். ஏனெனில், இந்த முதல் 10 கார்களில் 6 மாருதி சுஸுகி கார்கள் உள்ளன. அதாவது, இந்த லிஸ்ட்டில் பாதிக்கும் மேலானவை மாருதி சுஸுகி கார்கள் ஆகும்.

india s most selling cars

சில மாத டாப்-10 கார் லிஸ்ட்டில் 7 மாருதி சுஸுகி கார்கள் கூட இடம்பிடித்துள்ளன. லிஸ்ட்டில் முதல் 4 இடங்களை மாருதி சுஸுகி கார்கள் பிடித்த சம்பவங்கள் கூட நடந்துள்ளன. ஆனால், கடந்த மார்ச் மாத விற்பனையில் அந்த நிலைமை சற்று மாறியுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

கடந்த 2025 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் மொத்த விற்பனை எண்ணிக்கையை கூட்டினால் 1 லட்சத்து 63 ஆயிரத்து 452 என வருகிறது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த 10 கார்கள் மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 237 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

india s most selling cars

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்பட்ட காராக அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift), வேகன் ஆர் (Wagon R) போன்ற விலை குறைவான மாருதி கார்களை எல்லாம் முந்திக் கொண்டு இந்த லிஸ்ட்டில் கிரெட்டா முதலிடத்தை பிடித்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில், ஸ்விஃப்ட், வேகன்ஆர் அளவுக்கு கிரெட்டா மிகவும் விலை குறைவான கார் கிடையாது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 59 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 458 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 9.73% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 1,601 கிரெட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டாவுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 17,746 ஆகும். இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்திருப்பினும், 2024 மார்ச்சை காட்டிலும் 2025 மார்ச்சில் அதிக ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 மார்ச்சில் 15 ஆயிரத்து 728 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 12.83%, அதாவது 2,018 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

டாடா பஞ்ச் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 17 ஆயிரத்து 714 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் பஞ்ச் கார் விற்பனை இவ்வாறு அதிகமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், 2024 மார்ச்சில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் டாடா பஞ்ச் ஆகும்.

தொடர்ந்து 3 மாதங்களாக மக்கள் அதிகம் வாங்கும் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது. இத்தனைக்கும் கடந்த மார்ச்சில் விற்பனையான பஞ்ச் கார்களை காட்டிலும் 2024 மார்ச்சில் 167 கார்கள் குறைவாக 17,547 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதகடுத்து 4வது இடத்தில் மாருதி சுஸுகியின் மற்றொரு விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான வேகன்ஆர் (Wagon R) உள்ளது.

இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்கும் வேகன்ஆர் கடந்த மார்ச் மாதத்தில் 17 ஆயிரத்து 175 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2024 மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 368 வேகன்ஆர் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

இந்த வரிசையில் 5வது இடத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி (MPV) ரக காரான எர்டிகா (Ertiga) உள்ளது. 2024 மார்ச்சில் 14 ஆயிரத்து 888 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 804 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Brezza) 16 ஆயிரத்து 546 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

பிரெஸ்ஸாவும் 2024 மார்ச்சில் 14,614 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதனை காட்டிலும் குறைவாக 14 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே 2024 மார்ச்சில் விற்பனையாகி இருந்த நெக்ஸான் 16 ஆயிரத்து 366 யூனிட்கள் விற்பனை உடன் இந்த முறை 7வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. மாருதி சுஸுகி டிசைர் (Dzire) இந்த வரிசையில் 8வது இடத்திற்கு சறுக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், 2024 மார்ச்சை காட்டிலும் 434 கார்கள் குறைவாக 15,460 டிசைர் கார்கள் மட்டுமே கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைர் காரவது பரவாயில்லை... 9வது இடத்தில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ 2024 மார்ச்சை காட்டிலும் 1,238 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 10வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் 13,669 கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பெல்லாம் விற்பனையில் டாப்-10 இடத்தை பிடிக்கும் கார்களின் விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். இப்போது 10வது இடத்தை பிடித்துள்ள ஃபிரான்க்ஸ் 13,669 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் 13 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்கப்பட்ட கார்களால் கூட டாப்-10 இடத்திற்குள் நுழைய முடியவில்லை. இதில் இருந்து இந்தியாவில் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 10:19 [IST]
English summary
Indias most sold cars of march 2025 hyundai creta as usual top on list
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+