மாருதி கார் எல்லாம் இல்லை... இந்தியாவில் இப்போதைக்கு அதிகம் பேர் வாங்குவது இந்த டாடா காரை தான்!
இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தை கடந்த 2025 செப்டம்பரிலும் தொடர்ந்து வலுவாக இருந்தது. குறிப்பாக, எஸ்யூவிகள் (SUVs), காம்பாக்ட் கிராஸ்ஓவர்கள் (Compact Crossovers) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் நகர்ப்புறங்களிலும், 2ஆம் கட்ட நகர்ப்புறங்களிலும் விற்பனையில் முன்னிலை வகித்தன.
ஜிஎஸ்டி (GST) மாற்றங்களின் தாக்கம் காரணமாக, காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் பிரிவு கார்களின் விற்பனையில் 2024 செப்டம்பரை காட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது. 2025 செப்டம்பரில் இந்தியாவில் அதிகம் விற்பனையான முதல் மூன்று கார்களாக டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) ஆகியவை திகழ்ந்தன.

இருப்பினும் வழக்கம்போல் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆறு கார்கள் இடம்பிடித்துள்ளன. டாடா நெக்ஸான் கடந்த 2025 செப்டம்பரில் 22,573 யூனிட்கள் விற்பனையாகி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 97% அதிகரிப்பு ஆகும்.
அதாவது 11,118 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் டிசையர் 20,038 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரை விட 85% அதிகம், அதாவது அந்த மாதத்தில் விற்பனையானதை காட்டிலும் கூடுதலாக 9,185 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா 18,861 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரை விட 19% வளர்ச்சி, அதாவது 3,000 யூனிட்கள் அதிகம் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) (கிளாசிக் மற்றும் என் வகைகள் உட்பட) 18,372 யூனிட்களுடன் இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 27% அதிகம், அதாவது 3,900 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன. டாடா பன்ச் (Tata Punch) 15,891 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 16% வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 2,200 யூனிட்கள் அதிகம். மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் (Swift) 15,547 யூனிட்களுடன் ஆறாவது இடத்தை தனதாக்கி உள்ளது.

இது 2024 செப்டம்பர் மாதத்தை விட 4% சரிவு, அதாவது 694 யூனிட்கள் குறைவு ஆகும். மாருதி சுஸுகி வேகன்ஆர் (WagonR) 15,388 யூனிட்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இது 2024 செப்டம்பரை விட 15% வளர்ச்சி ஆகும். அதாவது 2,049 வேகன்ஆர் கார்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக விற்பனையாகி உள்ளன.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx) 13,767 யூனிட்கள் விற்பனையுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் வெறும் 1% சரிவைக் காட்டுகிறது. மாருதி சுஸுகியின் பலேனோ (Baleno) என்கிற பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 13,173 யூனிட்களுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது 2024 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட 14,292 பலேனோ கார்களை விட 8% சரிவு ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga) 12,115 யூனிட்கள் விற்பனையுடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 17,441 எர்டிகா கார்களை விட 31% குறைவாகும்.
| Rank | OEM | Bodystyle | Model | Sep'25 | Sep'24 | Y-o-Y |
|---|---|---|---|---|---|---|
| 1 | Tata | SUV | Nexon | 22,573 | 11,470 | 97% |
| 2 | Maruti Suzuki | Sedan | Dzire | 20,038 | 10,853 | 85% |
| 3 | Hyundai | SUV | Creta | 18,861 | 15,862 | 19% |
| 4 | Mahindra | SUV | Scorpio | 18,372 | 14,438 | 27% |
| 5 | Tata | SUV | Punch | 15,891 | 13,711 | 16% |
| 6 | Maruti Suzuki | Hatchback | Swift | 15,547 | 16,241 | -4% |
| 7 | Maruti Suzuki | Hatchback | Wagon R | 15,388 | 13,339 | 15% |
| 8 | Maruti Suzuki | SUV | Fronx | 13,767 | 13,972 | -1% |
| 9 | Maruti Suzuki | Hatchback | Baleno | 13,173 | 14,292 | -8% |
| 10 | Maruti Suzuki | MUV | Ertiga | 12,115 | 11,474 | 6% |
| 11 | Mahindra | SUV | Thar | 11,846 | 8,843 | 34% |
| 12 | Hyundai | SUV | Venue | 11,484 | 10,259 | 12% |
| 13 | Maruti Suzuki | SUV | Brezza | 10,173 | 15,322 | -34% |
| 14 | Maruti Suzuki | Van | Eeco | 10,035 | 11,908 | -16% |
| 15 | Toyota | MUV | Innova + Hycross | 9,783 | 8,052 | 21% |
| 16 | Mahindra | SUV | XUV 700 | 9,764 | 9,646 | 1% |
| 17 | Mahindra | SUV | XUV 3XO | 9,032 | 9,000 | 0% |
| 18 | Kia | SUV | Sonet | 9,020 | 10,335 | -13% |
| 19 | Tata | Hatchback | Tiago | 8,322 | 4,225 | 97% |
| 20 | Toyota | SUV | Hyrder | 7,608 | 5,385 | 41% |
| 21 | Kia | MUV | Carens | 7,338 | 6,217 | 18% |
| 22 | Kia | SUV | Seltos | 5,816 | 6,959 | -16% |
| 23 | Maruti Suzuki | SUV | Grand Vitara | 5,698 | 10,267 | -45% |
| 24 | Hyundai | SUV | Exter | 5,643 | 8,908 | -37% |
| 25 | Maruti Suzuki | Hatchback | Alto | 5,434 | 8,655 | -37% |
Source: AutoPunditz
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்து இந்தியர்களின் தற்போதைய ஃபேவரட் காராக மாறியுள்ள டாடா நெக்ஸானுக்கு சில வருடங்கள் முன்பு வரையில் இவ்வாறுதான் அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால், இடையில் இதன் விற்பனை சரிந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மீண்டும் நெக்ஸான் முன்னிலை பெற்று இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









