கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் இந்த காரை வாங்க 4- 5 மாதம் வெயிட் பண்ணனும்! காரின் விலை அப்படி...!!

இந்தியாவின் இரண்டாவது, அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), தனது முதன்மை எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் காரான எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) மூலம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் அதிவேக எம்ஜி கார் மற்றும் இந்தியாவின் அதிக விலையிலான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எனப் பெயர் பெற்றுள்ள சைபர்ஸ்டர், அறிமுகமான சில மாதங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் கார் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வெர்மா (Shafali Verma) சைபர்ஸ்டர் காரை வாங்கி இருந்ததை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். எம்ஜி நிறுவனத்தின் பிரத்யேக 'எம்ஜி செலக்ட்' சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்கள் மூலம் இதுவரையில் 350-க்கும் மேற்பட்ட சைபர்ஸ்டர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

india s most sought-after sportscar

இதனை பெருமிதத்துடன் தெரிவித்துள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம், இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் 4 முதல் 5 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய அளவிற்கு அசாதாரண தேவை ஏற்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை பல தரப்பு மக்களையும் சைபர்ஸ்டர் கவர்ந்துள்ளது.

பிரபலமான எம்ஜிபி ரோட்ஸ்டர் (MGB Roadster) காரின் பாரம்பரியத்தில் உருவான எம்ஜி சைபர்ஸ்டர், எதிர்கால வடிவமைப்புடன் ஆற்றல் மற்றும் செயல்திறனை ஒருங்கிணைக்கிறது. திறந்தவெளி அனுபவத்தை விரும்பும் ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த காரின் தனித்துவமான வடிவம், கத்தரிக்கோல் வடிவ கதவுகள் மற்றும் மென்மையாக திறந்து மூடும் மேற்கூரை, கிளாசிக் அழகியலுடன் நவீனத்துவத்தை இணைக்கிறது.

india s most sought-after sportscar

சைபர்ஸ்டரின் இரட்டை மோட்டார் ஆல்-வீல் டிரைவ் அமைப்பு அதிகப்பட்சமாக 510 பிஎஸ் ஆற்றலையும், 725 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக இந்த கார் வெறும் 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது. மேலும், கூர்மையான டிசைனிலான DRL-கள், ஆக்டிவ் ஏரோ பாகங்களுடன் கூடிய கம்பேக் (Kammback) பின்புற வடிவமைப்பு மற்றும் 4-பிஸ்டன் பிரெம்போ முன் பிரேக் காலிப்பர்கள் ஆகியவை சைபர்ஸ்டர் காரின் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களாகும்.

இந்த பிரேக்குகள் 100 கிமீ/மணி வேகத்தில் இருந்து வெறும் 33 மீட்டரில் காரை முழுமையாக நிறுத்த உதவுகின்றன. இதற்கேற்ப, பைரெல்லி P-ஜீரோ டயர்களுடன் கூடிய 20 அங்குல அலாய் சக்கரங்கள் சிறந்த பிடிமானத்தையும் செயல்திறனையும் உறுதி செய்கின்றன. எம்ஜி சைபர்ஸ்டர் ரூ.74.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

india s most sought-after sportscar

சைபர்ஸ்டர் மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) ஆகிய கார்களின் ஒருங்கிணைந்த வெற்றியால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு எம்ஜி எலெக்ட்ரிக் கார்களும் தொடர்ந்து சந்தையில் சிறந்த வரவேற்பையும், வலுவான தேவையையும் பெற்று வருகின்றன.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 14 எம்ஜி செலக்ட் ஷோரூம் மையங்களைக் கொண்டுள்ளது. எம்ஜியின் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதற்கான இந்த ஷோரூம் மையங்கள், இந்திய கார் வாங்குபவர்களுக்கு சிறந்த கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் விதமாக, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் உடன், எம்ஜி சைபர்ஸ்டர் மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் நேரில் காண காட்சிக்கு கொண்டுள்ளன.

india s most sought-after sportscar

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காருக்கு கிடைத்துவரும் இந்த அபரிதமான வரவேற்பு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டும், ஸ்போர்ட்ஸ் கார்கள் மார்க்கெட்டும் எந்த அளவிற்கு மாறி வருகிறது என்பதை காட்டுகிறது. இதற்கு காரின் வடிவமைப்பு மற்றும் எம்ஜி செலக்ட் ஷோரூம்கள் உள்ளிட்டவற்றை காரணமாக சொன்னாலும், இவற்றை காட்டிலும் முக்கியமான காரணம், காருக்கு எம்ஜி நிர்ணயித்துள்ள குறைவான விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 19:56 [IST]
English summary
Indias most sought after sportscar mg cyberster now with 4 5 month delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X