டாடாவை சுத்து போட்டு காலி செய்யும் மஹிந்திரா மற்றும் எம்ஜி!! கஸ்டமர்களை காந்தம் மாதிரி கவர்ந்து இழுக்கின்றன!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், எலக்ட்ரிக் கார்களும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சமீப காலமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 மே மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு இருந்தது? எந்த நிறுவனங்கள் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மார்க்கெட் கொஞ்சம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களுக்கு கடந்த சில வருடங்களாகவே மார்க்கெட் கொஞ்சம் மந்தமான நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் கிடைத்தாலும், நாடு முழுவதும் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இல்லாததே இந்த மந்த நிலைக்கு முக்கியமான காரணம் ஆகும்.

electric car brands sales report

இதனாலேயே எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உடனடியாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே அதே நிலையில்தான் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 319 ஆகும். இது கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் 19% குறைவாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 83 எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதுவே, அதற்கு முந்தைய 2023 மே மாதத்தில் 6 ஆயிரத்து 18 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது ஏறக்குறைய ஆயிரம் யூனிட்கள் குறைந்துக் கொண்டே வருகிறது.

electric car brands sales report

இதனால், மார்க்கெட்டில் விற்பனையாகும் மொத்த எலக்ட்ரிக் கார்களுள் டாடா எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கமும் குறைந்துக் கொண்டே வருகிறது. 2024 மே மாதத்தில் இந்திய எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் 66.55% பங்கை டாடா எலக்ட்ரிக் கார்கள் கொண்டிருந்தன. அதாவது, அந்த சமயத்தில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்கும் 3இல் இருவர் டாடாவின் எலக்ட்ரிக் கார்களை வாங்கும் சூழல் இருந்தது.

ஆனால், இந்த சதவீதம் ஆனது கடந்த மே மாதத்தில் 35.4% ஆக குறைந்துள்ளது. அதாவது, 3இல் ஒருவர் மட்டுமே டாடா எலக்ட்ரிக் காரை வாங்குகிறார். இவ்வாறு, எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறைந்துக் கொண்டே வரும் போதிலும், டாடா மோட்டார்ஸ் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக இன்னமும் முதலிடத்தை தொடர்கிறது.

electric car brands sales report

டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 3 ஆயிரத்து 732 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. கடந்த 2024 மே மாதத்தில் 1,441 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்திருந்த எம்ஜி நிறுவனம் தற்போது சுமார் 147% வளர்ச்சி உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மேலும் நெருங்கியுள்ளது.

எம்ஜி மோட்டாரின் வளர்ச்சியை போன்று, 3வது இடத்தில் உள்ள மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் வளர்ச்சியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், 2024 மே மாதத்தில் வெறும் 564 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மஹிந்திரா, கடந்த மே மாதத்தில் சுமார் 338% வளர்ச்சி உடன் 2,604 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் வளர்ச்சி தான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸின் வீழ்ச்சியாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. டாடா எலக்ட்ரிக் கார்களை வாங்க பிளான் போட்டு வந்தவர்களில் பலர் இந்த இரு நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். எம்ஜி, மஹிந்திரா - இந்த இரு நிறுவனங்களில் உள்நாட்டு கார் கம்பெனியான மஹிந்திராவின் வளர்ச்சி வரும் மாதங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 3, 2025, 17:50 [IST]
English summary
Indias most trusted electric car brands as per 2025 may sales report
மேலும்... #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X