சொகுசா போக நினைப்பவங்க எல்லாரும் இந்த ஹூண்டாய் காரை தான் வாங்குறாங்க.. மாருதி கார் எல்லாம் அதுக்கு அடுத்துதான்

எஸ்யூவி (SUV) கார்களுள் பல வகைகள் உள்ளன. மைக்ரோ-எஸ்யூவி, காம்பெக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, ஃபுல்-சைஸ் எஸ்யூவி உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவைகளாகும். இதில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களுள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 4.3 மீட்டர்களில் இருந்து 4.5 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்டவை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும்.

இந்தியாவில் பல்வேறு விதமான கார் பிராண்ட்களில் இருந்து மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுள் தற்போதைக்கு மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருப்பது ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) ஆகும். ஹூண்டாயில் இருந்து தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராக கிரெட்டா விளங்குகிறது.

most selling mid-size suv cars

கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ஹூண்டாயில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 522 ஆகும். அதுவே, 2024 ஜனவரியில் 13 ஆயிரத்து 212 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் கிரெட்டா கார்களின் விற்பனை ஆனது 40% அதிகரித்துள்ளது.

கிரெட்டாவுக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி காராக மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 2வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 784 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 ஜனவரியில் 13 ஆயிரத்து 438 கிராண்ட் விட்டாரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

most selling mid-size suv cars

இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே இரு மஹிந்திரா கார்கள் உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்பன அவை இரண்டாகும். 3வது இடத்தில் உள்ள ஸ்கார்பியோ ஆனது கிராண்ட் விட்டாராவுக்கு கிட்டத்தட்ட இணையாக 15 ஆயிரத்து 442 யூனிட்களும், 4வது இடத்தில் உள்ள எக்ஸ்யூவி700 கார் 8 ஆயிரத்து 399 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு மஹிந்திரா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை 2024 ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் தான் இருந்தது. 5வது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் கடந்த ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து 470 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 ஜனவரியிலும் 6 ஆயிரத்து 391 யூனிட்களே இந்த கியா கார் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

most selling mid-size suv cars

டொயோட்டா ஹைரைடர் மற்றும் டாடா கர்வ் கார்கள் இதற்கடுத்த 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் இவை இரண்டும் முறையே 4,941 மற்றும் 3,087 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் முறையே ஹோண்டா எலிவேட் (1,773), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (1,548) மற்றும் டாடா சஃபாரி (1,548) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் என சில நிறுவனங்களில் இருந்து மட்டுமே இரு மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் உள்ளன. மற்றவை எல்லாம் குறைந்தது ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காரை ஆவது விற்பனை செய்வோம் என்கிற நோக்கத்தில் அவற்றை விற்பனை செய்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, February 10, 2025, 11:14 [IST]
English summary
Indias top 10 most sold mid size suv cars in 2025 january
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X