கார்கள் விற்பதில் டாடாவுக்கு தண்ணி காட்டும் கொரியன் கார் பிராண்ட்! இதுக்கு நடுவுல மஹிந்திராவின் போட்டி வேற!

உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கூட சுமார் 3.85 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வழக்கத்தை காட்டிலும் குறைவா அல்லது அதிகமா என்பதையும், கடந்த மாதத்தில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தற்போதைக்கு 14 நிறுவனங்களில் இருந்து கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 14 நிறுவனங்களில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரத்து 842 கார்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2024 மார்ச் மாதத்தில் இதே 14 நிறுவனங்களில் இருந்து 3 லட்சத்து 69 ஆயிரத்து 381 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

india s top car brands

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் கார்கள் விற்பனை ஆனது 4.46%, அதாவது 16,461 யூனிட்கள் குறைந்துள்ளது. வழக்கம்போல், கடந்த மார்ச் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகியில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 743 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பினும், மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை ஆனது 1.29% சரிந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 718 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் (Hyundai) உள்ளது. பெரும்பாலும் 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனம் பிடிப்பதுதான் வழக்கம்.

india s top car brands

ஆனால், கடந்த பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களை எல்லாம் முந்திக் கொண்டு மஹிந்திரா (Mahindra) நிறுவனம் 2வது இடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தி இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாத விற்பனையில் ஹூண்டாய் மீண்டும் தனது வழக்கமான 2வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது.

ஹூண்டாயில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 51 ஆயிரத்து 820 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாத இடைவெளிக்கு பின் ஹூண்டாய் மீண்டும் 2வது இடத்தை பிடித்திருப்பினும், உண்மையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 1,181 கார்களை ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தையும் வழக்கம்போல் டாடா மோட்டார்ஸ் சொந்தமாக்கி உள்ளது.

india s top car brands

டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 51 ஆயிரத்து 616 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஹூண்டாய்க்கும், டாடா நிறுவனத்துக்கும் இடையே வெறும் 204 கார்கள் மட்டுமே வித்தியாசம் ஆகும். 2024 மார்ச்சில் 50 ஆயிரத்து 105 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இந்த லிஸ்ட்டில் இந்த முறை 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள மஹிந்திரா கடந்த மார்ச்சில் 48 ஆயிரத்து 48 கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்கள் முறையே 28,373 மற்றும் 25,507 கார்கள் விற்பனை உடன் உள்ளன. ஏழாவதில் இருந்து 10வது இடம் வரையில் ஸ்கோடா (7,422), ஹோண்டா (7,228), எம்ஜி மோட்டார் (5,501) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,538) நிறுவனங்கள் உள்ளன.

india s top car brands

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 மார்ச்சை காட்டிலும் இந்த மார்ச்சில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் கார்களை மஹிந்திரா அதிகமாக விற்பனை செய்துள்ளது என்றாலும், கடந்த பிப்ரவரியில் 2வது இடத்தை பிடித்துவிட்டு தற்போது மீண்டும் 4வது இடத்திற்கு சறுக்கி இருப்பது ஏமாற்றமாக இருந்திருக்கும். அதேபோல், மாருதி சுஸுக்கும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கார்கள் குறைவாக விற்பனை ஆகி இருப்பது சற்று வருத்தமாகதான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 6, 2025, 22:51 [IST]
English summary
Indias top car brands in 2025 march sales maruti suzuki top on list
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X