மாருதி சுஸுகி, ஹூண்டாய் கம்பெனிகளுக்கு பயங்கர ஷாக்! பலரும் போட்டி போட்டு வாங்கும் டாடா கார்!
2025 அக்டோபர் மாதம் கார்கள் விற்பனை பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. பண்டிகைக் கால உத்வேகம், வாடிக்கையாளர்களின் ஆர்வம் மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடுகள் ஆகியவை இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். இந்த மாதம், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்கள் கார்கள் விற்பனையில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன.
அதே சமயம், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களும் அவற்றின் எஸ்யூவி ரக கார்கள் மூலம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த தொகுப்பில், கடந்த அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களை பற்றி தான் பார்க்க போகிறோம். டாடா நெக்ஸான் (Tata Nexon) 22 ஆயிரத்து 83 கார்கள் விற்பனையுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 50% விற்பனை வளர்ச்சியைக் காட்டுகிறது. பெட்ரோல், டீசல், மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (EV) உள்ளிட்ட அதன் பல்வேறு வேரியண்ட்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில், மாருதி சுஸுகி டிசையர் 20 ஆயிரத்து 791 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 64% வளர்ச்சியுடன் வலுவான விற்பனை திறனை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டிசையர் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா, 20 ஆயிரத்து 87 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் பிரிவில் மிகவும் நம்பகமான எம்பிவி கார் என்ற நற்பெயரை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. எர்டிகாவின் ஏழு இருக்கை அமைப்பு, குறைந்த எரிபொருள் நுகர்வுள்ள பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் இந்த காரை தொடர்ந்து அதிகம் விற்பனையாகும் எம்பிவி காராக நிலைநிறுத்துகின்றன.

நான்காவது இடத்தில், மாருதி சுஸுகி வேகன்ஆர் 18 ஆயிரத்து 970 யூனிட்கள் விற்பனையாகி, ஹேட்ச்பேக் பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் உயரமான தோற்றம், விசாலமான உட்புறம் மற்றும் எரிபொருள் திறன் கொண்ட K-சீரிஸ் என்ஜின்கள், குறைந்த பட்ஜெட் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. ஜிஎஸ்டி 2.0 அறிமுகத்தால் விலைக் குறைப்பு ஏற்பட்டதும் இதன் விற்பனைக்கு மேலும் உதவியுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா, 18 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது நடுத்தர எஸ்யூவி கார்கள் பிரிவில் தனது வலுவான நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. போட்டி அதிகரித்த போதிலும், கிரெட்டாவின் விரிவான அம்சங்கள், அதன் பரந்த ரேஞ்ச் மற்றும் சிறந்த சேவை நெட்வொர்க் ஆகியவை இந்த காரை தொடர்ந்து முன்னணியில் நிறுத்தியுள்ளன.

இதன் மூலமாக கிரெட்டா, ஹூண்டாயின் அதிகம் விற்பனையாகும் காராகவும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் முக்கிய பங்களிப்பாளராகவும் விளங்குகிறது. மஹிந்திராவின் ஸ்கார்பியோ ரக வாகனங்களான ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய இரண்டும் சேர்த்து 18 ஆயிரத்து 107 யூனிட்கள் விற்பனையாகி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த வரிசையில், முதல் பத்து இடங்களைப் பிடித்த மற்ற கார்களில் மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ், பலேனோ, டாடா பன்ச் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும்.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் 17 ஆயிரத்து 3 யூனிட்களும், பலேனோ 16 ஆயிரத்து 873 யூனிட்களும் விற்பனையாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 9வது இடத்தில் உள்ள டாடா பன்ச் 16 ஆயிரத்து 810 யூனிட்களுடன் வலுவான விற்பனை வேகத்தைத் தொடர்கிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் விற்பனை 11% சரிந்த போதிலும், 15 ஆயிரத்து 542 யூனிட்கள் விற்பனையுடன் வலுவான பங்களிப்பை வழங்கி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

| Rank | Model | Oct’25 | Oct’24 | YoY |
|---|---|---|---|---|
| 1. | Tata Nexon | 22,083 | 14,759 | 50% |
| 2. | Maruti Suzuki Dzire | 20,791 | 12,698 | 64% |
| 3. | Maruti Suzuki Ertiga | 20,087 | 18,785 | 7% |
| 4. | Maruti Suzuki Wagon R | 18,970 | 13,922 | 36% |
| 5. | Hyundai Creta | 18,381 | 17,497 | 5% |
| 6. | Mahindra Scorpio | 18,107 | 15,877 | 14% |
| 7. | Maruti Suzuki Fronx | 17,003 | 16,419 | 4% |
| 8. | Maruti Suzuki Baleno | 16,873 | 16,082 | 5% |
| 9. | Tata Punch | 16,810 | 15,740 | 7% |
| 10. | Maruti Suzuki Swift | 15,542 | 17,539 | -11% |
| 11. | Mahindra Bolero | 14,343 | 9,849 | 46% |
| 12. | Maruti Suzuki Eeco | 13,537 | 11,653 | 16% |
| 13. | Maruti Suzuki Victoris | 13,496 | 0 | 0% |
| 14. | Kia Sonet | 12,745 | 9,699 | 31% |
| 15. | Mahindra XUV 3XO | 12,237 | 9,562 | 28% |
| 16. | Maruti Suzuki Brezza | 12,072 | 16,565 | -27% |
| 17. | Mahindra Thar | 12,029 | 7,944 | 51% |
| 18. | Hyundai Venue | 11,738 | 10,901 | 8% |
| 19. | Toyota Hyryder | 11,555 | 5,449 | 112% |
| 20. | Toyota Innova + Hycross | 11,089 | 8,838 | 25% |
| 21. | Maruti Suzuki Grand Vitara | 10,409 | 14,083 | -26% |
| 22. | Mahindra XUV700 | 10,139 | 10,435 | -3% |
| 23. | Tata Tiago | 8,850 | 4,682 | 89% |
| 24. | Kia Carens | 8,779 | 6,384 | 38% |
| 25. | Kia Seltos | 7,130 | 6,365 | 12% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் எந்த அளவிற்கு அதிகளவில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதற்கு இந்த லிஸ்ட் தான் சாட்சியாகும். ஏனெனில், இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தது 15 ஆயிரம் யூனிட்களாவது விற்பனையாகி உள்ளன. மாதத்திற்கு ஒரு கார் 15 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது என்றாலே நல்ல விஷயம், அப்படியிருக்க முதல் 10 கார்கள் அனைத்தும் இந்த அளவிற்கு விற்பனையாகி இருப்பது கடந்த மாதத்தில் கார்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









