வண்டி வச்சிருக்கிறவங்க எல்லாம் உஷாரகிடுங்க! இன்சூரன்ஸ் பிரிமியம் எகுறப்போகுது!
இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை அதிகமாகப்போகிறது. இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இந்த அறிவுரையை வழங்கி பிரிமியம் தொகையை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த பிரிமியம் தொகை எவ்வளவு உயரும் இதனால் மக்களுக்கு என்ன வகையில் பாதிப்பு வரும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களை எல்லாம் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம ்தான் கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது மோட்டார் வாகனங்களுக்கான 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரிமியத்தை 18 சதவீதம் வரை உயர்த்த அறிவுரை வழங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட வாகன கேட்டகிரிக்கு 20-25 சதவீதம் வரை பிரமியம் தொகையை உயர்த்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து இறுதி முடிவு அடுத்த 2-3 வாரங்களில் எடுக்கப்படும் என தெரிகிறது. மத்திய மோட்டார் வாகன அமைச்சகம் இ்நத முடிவை எடுத்தபிறகு இதை ஒர வரைவாக தயாித்து மக்களின் வாதத்திற்கு விடும். பின்னர் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கு 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக இருக்கிறது. இதனால் வாகனம் விபத்தில் சிக்கும் போது விபத்தில் சம்ந்தப்படாத நபருக்கு ஏற்படும் இழப்பை இதன் மூலம் ஈடு செய்ய முடியும். இந்த 3ம் நபருக்கான பிரிமியம் தொகையை வாகன ஓட்டிகள் கட்டாயம் செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரிமியம் தொகையில் மாற்ம் இல்லாமல் இருந்தது.

இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் முறையில் அதிக நஷ்டத்தை சந்தித்து வந்தனர். கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட இன்சூரன்ஸ்களில் 60 சதவீதம் 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் தொகையாக மட்டுமே இருந்தது. 19 சதவீதம் தான் ஜெனரல் இன்சூரன்ஸ் தொகையாக இருந்தது. இதனால் 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக காண முடியும்.
இந்தியாவில் மருத்துவ செலவுகள் அதிகமாகியுள்ளது. கோர்ட் மூலம் வழங்கப்படும் கிளைம் அதிகமாகியுள்ளது. மேலும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் விபத்துகளுக்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளதன் காரணமாக இந்த பிரிமியம் தொகையை உயர்த்த வேண்டிய அவசியம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2021ம் ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த விதமான உயர்வும் இல்லாமல் அதே தொகையே தற்போது வரை வசூலிக்கப்படுகிறது. இது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள நிலையில் இந்த பிரிமியம் தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரித்தது தற்போது வாகனம் வாங்கும் போது 18-25 சதவீதம் வரை பிரியம் தொகை அதிகமாகப்போகிறது. இதனால் வாகனத்தின் உரிமையை பெறுவதற்கான செலவும் அதிகரிக்கும். இன்சூரன்ஸ் புதுப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக புதுப்பித்தால் இந்த விலை உயர்விலிருந்து இந்தாண்டு தப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications









